பாலிவூட் நடிகர் ரன்பீர் கபூரும் நடிகை கத்ரினா கைப்பும் காதலர்கள் என்பது இப்போது அனைவருக்கும் தெரிந்த விசயம். முடிந்தவரை இணைந்தே இருப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் இவர்கள்.
ஆனால், கத்ரினா கைப்பை சந்திப்பதற்கு நடிகர் ரன்பீர் கபூருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பிட்டூர் எனும் திரைப்படத்தில் ஆதித்ய சோப்ராவுடன் இணைந்து நடித்து வருகிறார் கத்ரினா கைப்.
படப்பிடிப்புத் தளத்திலும் தனது காதலியை பிரிந்திருக்க விரும்பாத ரன்பீர் கபூர், கத்ரினாவை பார்ப்பதற்காக அங்கு சென்றார். ஆனால், படபிடிப்பை விரைவாக நடத்தி முடிக்கும் அவசரத்தில் உள்ள இயக்குனர் அபிஷேக் கபூர், ரன்பீரை அங்கு சந்திக்க வேண்டாம் என கத்திரினாவிடம் கூறினாராம்.
படப்பிடிப்பு மீதான கவனம் திசைதிருப்பப்பட்டு படப்பிடிப்பு பாதிக்கப்படும் என இயக்குனர் அபிஷேக் கபூர் கருதியமையே இதற்குக் காரணம்.

No comments:
Post a Comment