Wednesday, 4 February 2015

ஆரம்பமானது என்னை அறிந்தால் ஃபீவர்.. முதல் காட்சி எங்க.. எப்போ.. எத்தனை மணி..?


ரசிகர்கள் ஆர்வமாய் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ’என்னை அறிந்தால்’ படம் நாளை முதல் உலங்கெங்கும் வெளியாகிறது. ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
இதுவரை அஜித் நடித்த படங்கள் உலகம்மெங்கும் 1000 தியேட்டர்களைக் கூட எட்டியதில்லை. முதன்முறையாக, இப்படம் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளதுஎன்னை அறிந்தால்.
இந்நிலையில் படத்தை நேற்றிலிருந்தே வரவேற்கத் தயாராகிவிட்டார்கள் அஜித் ரசிகர்கள். பிப்ரவரி 5ஆம் தேதி அதாவது நாளை வெளியாகும் அவரது படத்துக்கு இப்போதிலிருந்தே பாலாபிஷேகம், பூஜை செய்து ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
பொதுவாக இந்த மாதிரி கொண்டாட்டங்கள் பெரும்பாலும் படம் வெளியாகும் நாளன்றுதான் நடக்கும். ஆனால், அஜித்தின் ‘என்னை அறிந்தால்' படம் வெளியாவதற்கு முன்பே அஜித் ரசிர்கள் அப்படத்தின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடியுள்ளனர்.
நேற்று இரவு சென்னை காசி திரையரங்கில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய ‘என்னை அறிந்தால்' கட்-அவுட்டுக்கு அஜித் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். மதுரையில் உள்ள அஜித் ரசிகர்களும் இதே போல பூஜை, பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.
அதோடு என்னை அறிந்தால் படத்தின் முதல் நாள் முதல் காட்சி கே.கே நகரில் உள்ள காசி திரையரங்கில் அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
ரசிகர்கள் இந்தக் காட்சியை மேள தாளம் முழங்க, ஏக ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். ரசிகர் மன்றங்களை முற்றாக அஜித் கலைத்த பிறகும், அவரது ரசிகர்கள் அதே உற்சாகத்துடன் அவர் படங்களை வரவேற்று கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment