Wednesday, 18 February 2015

ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..!


காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி வெளிவந்த 'பிப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே’(fifty shades of grey)படம் ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் வசூல் மழையை பொழிது வருகிறது.
எரிகா மிட்சல் ஜேம்ஸ் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் டகோட்டா ஜான்சன், ஜாமி டோர்ணன், எலோய்ஸ் மம்போர்ட் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் டெய்லர், ஜான்சன் இயக்கி இருக்கிறார்கள். ஒரு இளம் தொழில் அதிபரும் ஒரு அழகியும் இயற்கையான உறவுகளை தாண்டி விதவிதமான உறவு கொண்டு வாழும் கதை தான் இந்தப் படத்தின் கதை.
படத்தில் அதிகமான ஆபாசங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்தியா, பாகிஸ்தான், உட்பட 60க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த படத்திற்கு தடை விதித்திருக்கிறது. ஆனப்போதிலும் ரிலீஸான இடங்களில் எல்லாம் வசூலை மழையை பொழிது ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
இப்படம் ரிலீஸாகி தற்போது நான்கே நாட்கள் ஆன நிலையில் இதுவரை $93,010,350 ( இந்திய மதிப்பில் 579 கோடிக்கு மேல்) வசூல் செய்துள்ளது.
இந்த வார ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்த முதல் 10 படங்கள்:
Fifty Shades of Grey = $93,010,350 (இந்திய மதிப்பில் 579 கோடிக்கு மேல்)
Kingsman: The Secret Service = $41,761,512 (260 கோடிக்கு மேல்)
The SpongeBob Movie: Sponge Out of Water = $40,007,494 (249 கோடிக்கு மேல்)
American Sniper = $18,779,843 (116 கோடிக்கு மேல்)
Jupiter Ascending = $10,755,447 (67 கோடிக்கு மேல்)
Paddington = $5,770,559 (35 கோடிக்கு மேல்)
Seventh Son = $4,841,540 (30 கோடிக்கு மேல்)
The Imitation Game = $4,179,402 (26 கோடிக்கு மேல்)
The Wedding Ringer = $3,707,333 (23 கோடிக்கு மேல்)
Project Almanac = $3,300,551 (20 கோடிக்கு மேல்)

No comments:

Post a Comment