Wednesday, 18 February 2015

இயக்குநருடன் ’நயன’ நடிகையின் 4-வது காதல்..?


தமிழ் சினிமாவில் காதலுக்கு பெயர் போனவர் என்றால் இந்த நடிகையை சொல்லலாம் போல. ஒரு காதல் முறிந்தால் அடுத்த நொடியே அடுத்த காதலுக்கு தயாராகிவிடுகிறார் இந்த நடிகை. யார் அவர் என்று தெரிந்திருக்கும்.
ஆமாம் 8-க்கும் 10-க்கும் இடையில் உள்ள நம்பரை தன் பெயராக கொண்ட அந்த ’நயன’மான நடிகை தான். கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக இந்த நடிகையை பற்றிய செய்திதான் பரவலாக பறந்து வருகிறது.
ஏற்கனவே மூன்று காதலுக்கு முக்காடு போட்ட இந்த நடிகை தற்போது நான்காவது காதலை சுப்ரீம் ஸ்டார் அறிமுகமான ..டா ..டி படத்தை இயக்கிய இயக்குநரிடம் விரித்திருக்கிறாராம். அந்த இயக்குநர் தற்போது வடிவேலுவின் புகழ்பெற்ற டயலாக் ஒன்றை தலைப்பாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் சுமார் மூஞ்சி குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ’நயன’மான நடிகை. இந்தப்படத்தில் நடிக்கும் போதுதான் இயக்குநர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரை தீவிரமாகக் காதலித்து வருகிறாராம் நயன நடிகை.
ஏற்கெனவே விரல் வித்தை நடிகருடனும், நடனப் புயலுடனும் கிசுகிசுக்கப்பட்ட வந்தவர் சமீபத்தில் அவருடன் நடித்து வரும் வேறொரு நாயகனுடனும் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அந்த நடிகர் கடந்த வாரம்தான் தொலைக்காட்சி நடிகையைக் காதலிப்பதாக அறிவித்தார்.
இதனிடையே தன் மனம் கவர்ந்த இயக்குநரை அழைத்துக் கொண்டு பெற்றோரையும் சந்தித்து காதலுக்கு சம்மதம் வாங்கிவிட்டார் என்று கூட சொல்கிறார்கள். விரைவில் இந்தக் காதல் பற்றிய செய்திகள் பரபரப்பாகப் பேசப்படும் என்று கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.

No comments:

Post a Comment