65 வது பெர்லின் திரைப்பட விழாவில் ஈரானிய வம்சாவளி இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் வெளியான டாக்ஸி திரைப்படம் தங்கக் கரடி விருதை வென்றுள்ளது.
2010 ஆம் ஆண்டில் திரைப்படங்களை தயாரிப்பதற்கு விதிக்கப்பட்ட உத்தியோகபூர்வ தடையால் பாதிக்கப்பட்டதிலிருந்து இயக்குநரான ஜப்பர் பனஹியால் இயக்கப்பட்ட மூன்றாவது திரைப்படமாக இது உள்ளது.
பனஹியால் பெர்லின் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் அவரது மருமகள் ஹனா சேயிடி அவருக்கான பரிசைக் கண்கள் கலங்க கையேற்றார். தன்னால் உணர்வு மேலீட்டால் எதையுமே பேச முடியாதுள்ளதாக ஹனா தெரிவித்தார்.
அவர் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் மஞ்சள் நிற வாடகைக் கார் ஒன்றை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர் ஒருவரின் நினைவுகளை பிரதிபலிப்பதாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

No comments:
Post a Comment