Wednesday, 4 February 2015

இன்றைய தினம்....!! (பிப்ரவரி 5)


பிப்ரவரி 5
1900
பனாமா கால்வாய் பணியைத் தொடங்க அமெரிக்காவும், ஐக்கிய ராஜ்ஜியமும் முடிவு செய்த தினம்
பசுபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கையான கால்வாய் தான் பனாமா கால்வாய்.
இது அமைக்கப்படும் முன்னர் கப்பல்கள் தென்னமெரிக்கக் கண்டத்தைச் சுற்றியே செல்ல வேண்டியிருதது. 1880 ண்டிலேயே பிரான்சு தலைமையில் இவ்வாறு ஒரு கால்வாய் வெட்டுவதற்கான முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், 22000 தொழிலாளர்கள் இறந்ததை அடுத்து இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 1900களில் ஐக்கிய அமெரிக்கா மீண்டும் இந்த பனாமா கால்வாய் பணியைத் தொடங்கியது.
1900ம் ஆண்டு இதே தினத்தன்று தான் இப்பணி மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான உடன்பாடுகள் ஐக்கிய ராஜ்ஜியத்திற்க்கும், ஐக்கிய அமெரிக்கவிற்கும் இடையில் நடந்து முடிந்தன.
முழுபணிகளும் முடிந்து, 1914 இல் பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. இக்கால்வாய் 78 கிமீ நீளமும் 33.5 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த பனாமா கால்வாய் திறப்பதற்காக மட்டும், பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்க முயற்சிகளில் மொத்தமாக 27,500 தொழிலாளர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1999ல் இக்கால்வாய், பனாமா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. 1914ம் ஆண்டு இந்த கால்வாய் திறக்கப்படும் போது, சுமார் 1000 கப்பல்களே இதன் வழியாகச் சென்றன. ஆனால், 2008ம் ஆண்டு கனவாயைப் பயன்படுத்தும் கப்பல்களின் எண்ணிக்கை 14,702 ஆக உயர்ந்தது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1778 - தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது.
1958 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையினரால் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.
1958 - ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக கமல் அப்துல் நாசர் நியமிக்கப்பட்டார்.
1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.
இன்றைய சிறப்பு தினம்
காஷ்மீர் தினம் (பாகிஸ்தான்)

No comments:

Post a Comment