Friday, 20 February 2015

கசிந்தது ரகசியங்கள்.. விஜய்யின் 3 கெட்அப் இதுதான்..!


‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய், சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்று நமக்கு தெரியும்.
‘புலி’ என்று தலைப்பு வைத்திருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர். மற்றும் ஸ்ரீதேவி , ‘நான் ஈ’ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் முதன் முறையாக விஜய் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்தன. அதாவது சரித்திர கால திரைப்படமாக உருவாகிவரும் இதில் விஜய், தளபதி மற்றும் கார்ட்டூனிஸ்ட் என இரு வேறு தோற்றங்களில் நடிக்கிறார் என்றும், மூன்றாவது தோற்றத்தை படக்குழு வினர் ரகசியமாக வைத்திருப்பதாகவும், இந்த மூன்றாவது வேடம் இதுவரை விஜய் ரசிகர்கள் பார்க்காத புதுமையான கெட்டப்பாக இருக்கும் எனறும் தகவல்கள் வந்தது.
இந்நிலையில் தற்போது ‘புலி’ படக்குழுவிலிருக்கும் நம்பத்தகுந்த நபர் ஒருவர் இந்த செய்தியை உறுதி செய்ததுடன் ஒரு சில ரகசியங்களை கூறியிருக்கிறார். அவர் கூறியதிலிருந்து, மன்னர் யுகம், டெக்னாலஜி யுகம் என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் ‘புலி’ படத்தில் ஒரு விஜய் குள்ள மனிதராகவும், இன்னொரு விஜய் ஓவியராகவும், மூன்றாவது விஜய் மாடர்ன் யூத்தாகவும் நடிக்கிறார் என்று தெரியவருகிறது.
சமீபத்தில் ஈசிஆரில் படமாக்கப்பட்ட பாடல் காட்சி ஒன்றில் காமெடி நடிகை வித்யூலேகா ராமன் விஜய்யுடன் ஆடி அசத்தினார். தற்போது கேரளாவில் உள்ள மியூசியம் ஒன்றில் டெக்னாலஜி யுகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். விஜய்யும், ஸ்ருதிஹாசனும் இதில் கலந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment