Wednesday, 1 April 2015

லண்டனில் சீக்கியரை மரண அடி அடிக்கும் கும்பல் (வீடியோ)


கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் சீக்கிய சிறுவன் ஒருவனை அமெரிக்க குழந்தைகள் இழிவு படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, லண்டனில் மால் ஒன்றில் சீக்கியர் ஒருவரை கும்பல் ஒன்று சரமாறியாக தாக்கும் வீடியோ காட்சி ஃபேஸ்புக்கில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து, பர்மிங்காம் பகுதியின் பிராட் வீதியில் அமைந்துள்ள சிட்டி சென்டர் மாலில் இந்த வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ காட்சியில், சீக்கியர் ஒருவரை நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று மொத்தமாகச் சேர்ந்து தாக்குவது தெரிகிறது. சீக்கியரது முகத்தில் கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்குகின்றனர்.
பறந்து வந்து முட்டியாலும் எத்துகின்றனர். இந்த நால்வரையும், அந்த சீக்கியர் ஒரே ஆளாக சமாளிக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்யப்பட்ட பின் இந்த வீடியோவுக்கு பெரும் எதிர்ப்புகளும், கமெண்டுகளும் எழுந்துள்ளன. பலர் இதில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர்.
ஃபேஸ்புக்கில் இந்த வீடியோ வைரலாகியதை அடுத்து, லண்டன் காவலர்கள் இது குறித்து விசாரணை செய்ய முன்வந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சீக்கியர் தகவல்கள் அளித்தால் விசாரனைக்கு உதவியாக இருக்கும் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் லண்டன் வாழ் இந்தியர் மற்றும் வெளிநாட்டவர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment