Saturday, 4 April 2015

அரசி, செல்வி போன்ற சீரியல்களின் இயக்குனர் தற்கொலை!!!


பிரபல சின்னத்திரை இயக்குனர் பாலாஜி யாதவ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலாஜி யாதவ், ராதிகா சரத்குமாரின் வெற்றிகரமான சீரியல்களான அரசி, செல்வி போன்ற சீரியல்களை இயக்கியுள்ளார். மேலும், துளசி, பந்தம், உறவுகள், புகுந்த வீடு உட்பட பல சீரியல்களை இயக்கியுள்ளார்.
இவர் கடன் தொல்லை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. ஏனெனில், சில காலமாகவே மற்ற மொழி சீரியல்களின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. இதனால், உள்ளூர் தொலைக்காட்சி கலைஞர்களுக்கான வாய்ப்புகளும் குறைந்து வந்தது.
பாலாஜி யாதவ்வும் இதன் காரணமாக ஏற்பட்ட கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment