Monday, 6 April 2015

இன்றைய தினம்..!!(ஏப்ரல் 7)


ஏப்ரல் 7
உலக சுகாதார தினம்!!!
'உலக சுகாதார தினம்' 1950 முதல் ஆண்டுதோறும் அப்போதைய அவசியத்தை ஒட்டிய ஒரு கருப்பொருளில் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் ( World Health Organization) ஆதரவில் கொண்டாடப்படுகிறது.
இது 1948ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜப்பானின் யமாட்டோ போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது:
மிகப்பெரிய போர்க்கப்பலாக கருதப்பட்ட ஜப்பானின் யமாட்டோ போர்க்கப்பல் 1945ஆம் ஆண்டு இதே நாள் அமெரிக்கப்படையினரால், ஓக்கினாவா என்ற தீவுக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்டது.
இந்தக் கப்பல் 72,800 டன்கள் எடை கொண்டதாகும். மேலும், இது 18.1 இன்ச் அளவு கொண்ட 9 பீரங்கிகளைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1795 – மீட்டர் அளவு முறை பிரான்ஸால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1927 – முதல் தொலைதூர தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.(வாஷிங்டன் மற்றும் நியூயார்க் இடையில்)
1928 – மிக்கி மௌஸ் கதாபாத்திரம் இன்று தான் வால்ட் டிஸ்னியால் வரையப்பட்டது.
1948 – உலக சுகாதார அமைப்பு (WHO) தொடங்கப்பட்டது.
இன்றைய சிறப்பு நாள்:
உலக சுகாதார தினம்.

No comments:

Post a Comment