Monday, 16 February 2015

Hyosung GT650R பைக் பற்றி உங்களுக்கு தெரியுமா??


பசங்களுக்கு எப்பவுமே டூ வீலர் என்றாலே அலாதி ப்ரியம் தான். அதிலும் ரேஸ் பைக்குகள் என்றால் உயிரையே விடுவார்கள். கடைசியில் அதனால் உயிரை விட்டவர்களும் உண்டு.
சரி அப்படி என்னதான் இருக்கும் இந்த பைக்கில்? என்று கேட்டால் சிலர், ’இதெல்லாம் வச்சிருந்தாலே கெத்துமா’ என்பார்கள். சிலர், ‘அதெல்லாம் ஒரு ஃபீல்’ என்று சிலாகிப்பார்கள்.
ரேஸ் பைக் தயாரிப்பு நிறுவனங்களில் Hyosung நிறுவனமும் ஒன்று. இதன் GT650R மாடல் பைக் பற்றிதான் இன்று பார்க்கப் போகின்றோம். Hyosung GT650R மாடல் பைக்கானது, 647 சிசி எஞ்சீனுடன் வருகின்றது.
இதன் அதிகபட்ச வேகமானது 210/கிமீ ஆகும். இது 2.61 நிமிடங்களிலேயே 0-60கிமீ வேகத்தைத் தரக்கூடியதாகும். இந்த எஞ்சீன் 9000rpm உடன் 73bhp பவருடன் செயல்படக் கூடியது. பெட்ரோல் மூலம் செயல்படும் இதன் மைலேஜ் 20 கிமீ/லி என வாக்குறுதி தருகின்றனர் தயாரிப்பு நிறுவனத்தினர்.
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 17 லி. ரிசர்வ் அளவு 4.5 லி ஆகும். இதன் விலை எப்படியும் வாங்கும் போது ரூ.5.12 லட்சங்களை தாண்டும்.

No comments:

Post a Comment