இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.
நண்பகல் 12.15 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சந்தித்தார். இதைத் தொடர்ந்து, இருதரப்பு நல்லறவு, ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்தை பிற்பகலில் நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலை 10 மணிக்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் தனது மனைவி ஜெயந்தியுடன் ஜனாதிபதி மைத்திரிபால அஞ்சலி செலுத்தினார். பிறகு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பினைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மீண்டும் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இரவு 7.30 மணிக்கு சந்தித்தார். இதன் பிறகு, பிரணாப் முகர்ஜி இரவு 8 மணிக்கு அளிக்கும் அரசு விருந்தில் அவர் பங்கேற்றினார்.

No comments:
Post a Comment