ஆஸ்திரேலிய ஒபன் கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஆடவர் ஒற்றயைர் பிரிவு ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சிறந்த முறையில் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் ஆடவர் ஒற்றயைர் பிரிவிற்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் ஆறாம் நிலை வீரரான ஆண்டி முர்ரே இருவரும் மோதிக்கொண்டனர்.
இரண்டு பேரும் முன்னணி வீரர்கள் என்பதால் முதல் செட்டை வெற்றி பெற இருவரும் கடுமையாக போராடினார்கள். இதனால் முதல் செட் பிரேக்கர் வரை நீடித்தது இறுதியில் ஜோகேவிச் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதனால் 2வது செட்டில் முர்ரே மிகச் சிறப்பாக விளையாடினார். இந்த செட்டும் யாருக்கு வெற்றி கிடைக்கும் வரை சென்றது ஆனால் இதில் முர்ரே 4-6 என கணக்கில் வெற்றி பெற்றார்.
3வது செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் வெற்றி பெற்றார். முதல் 3 செட்டில் 2-1 ஜோகோவிச் முன்னிலை பெற்றதால் 4வது செட்டை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று அவர் மிகத் திறமையாக விளையாடினார்.
இதற்கு ஆண்டி முர்ரேவால் எதிர் தாக்குதல் செலுத்த முடியவில்லை அதனால் ஜோகோவிச் இந்த செட்டை 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-1 என ஆஸ்திரேலிய கிராண்சிலாம் பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் நான்கு தடவைகள் ஆஸ்திரேலிய பகிரங்க சுற்றுத் தொடரின வெற்றிக்கோப்பையை எடுத்துக்கொண்டார் ரோஜர் பெடரர் , அன்ட்ரே அகாஸி ஆகியோரது சாதனைகளை ஜோகோவிச் முறியடித்துள்ளார்.
மொத்தமாக நான்கு தடவைகள் ஆஸ்திரேலிய பகிரங்க சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்வாகி வெற்றிவாய்ப்பைத் தவறவிட்ட விரராக அன்டி முரே மாறியுள்ளார்.
No comments:
Post a Comment