Tuesday, 3 February 2015

இன்றைய தினம்....!! (பிப்ரவரி 4)


பிப்ரவரி 4
1948
இலங்கை விடுதலை பெற்ற தினம்
இலங்கை, இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு. இந்நாட்டில், தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், இலங்கை மலாய்கள், இலங்கை ஆப்ரிக்கர், பறங்கியர், இந்திய வம்சாவழித் தமிழர் என பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பிப்ரவரி 14, 1815ல் இந்நாட்டின் கடைசி தனியாட்சி மன்னன், சிறீ விக்ரம ராச சிங்கனிடமிருந்து ஆங்கிலேய அரசு முழு நாட்டிற்குமான ஆட்சியைப் பறித்தது.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த அடுத்த ஆண்டு, 1948 பிப்ரவரி 4ம் தேதி பிரித்தாணியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. சுதந்திர இலங்கையின், முதலாவது பிரதமராக D. S. சேனநாயக்க பதவியேற்றார்.
சுதந்திரம் பெற்ற இலங்கையின் அமைச்சரவையில், முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இடம்பெற்றிருந்தனர்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1783 - ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.
1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1794 - பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமைத் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது.
1834 - இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக வெளியிடப்பட்டது.
1936 - முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது.
1957 - திருகோணமலையில் கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற திருமலை நடராசன் போலீசாரினால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
1978 - இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிபராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.
2007 - ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய "பிரமாஸ்" ஏவுகணை ஒரிசா ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
2007 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இன்றைய சிறப்பு தினம்
உலகப் புற்றுநோய் நாள்

No comments:

Post a Comment