Monday, 6 April 2015

கேப்டன் Cool..!! இப்போ பொறுப்பான அப்பா ஆகிட்டார்..!


இந்திய அணியின் ’மோஸ்ட் சக்சஸ்ஃபுல்’ கேப்டனான கேப்டன் Cool, தற்போது பொறுப்பான அப்பாவாக மாறி தனது மகளை கவனித்து வருகின்றாராம்.
கடந்த 2010ஆம் ஆண்டு தனது காதல் மனைவியை மணந்த கேப்டன் தோனிக்கு சென்ற பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. Ziva என்று தங்களின் குழந்தைக்கு பெயரிட்டுள்ளனர்.
சனிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற ரெய்னாவின் திருமணத்தில் கலந்து கொண்டு தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு செல்லும் போது, விமான நிலையத்தில் தனது மகளை ஒரு கங்காரு குட்டியை சுமப்பது போல, தனது வயிற்றில் பத்திரமாக அழைத்து வந்தார்.
விமான நிலையத்தில் இவர்களைப் பார்த்த மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். மேலும், தோனி இந்திய அணியை மட்டுமில்லை தனது மகளையும் பொறுப்பாக பார்த்துக் கொளவதை பார்த்து வியந்தனர்.
உலகக் கோப்பை தொடர் முடியும் வரை தனது குழந்தையை தோனி பார்க்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

No comments:

Post a Comment