கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் விரைவில் திருமணம் செய்ய போகின்றார்களாம்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
ஆனால், இவர்களின் மீது பயங்கர கோபத்தில் இருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். ஏனெனில், இவர்களின் காதலால் தான் விராட் கோலி உலகக் கோப்பையில் கோட்டை விட்டார் என்பது அவர்களின் ஆதங்கம்.
ஆனால் இதைப் பற்றியெல்லாம் அவர்கள் இருவரும் கவலைப் படுவது போன்று தெரியவில்லை. உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறி இந்தியா திரும்பும் போது கூட இருவரும் ஜோடியாகவே வந்தனர்.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment