கடந்த மாதம் அதிகமான சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. தேர்வு காரணமாக பெரிய பட்ஜெட் படங்கள் அதிகமாக ரிலீஸாகவில்லை. ஆனால் இப்போது தேர்வுகள் முடிந்துவிட்டதால் இந்த மாத தொடக்கத்திலேயே பெரிய பட்ஜெட் படங்கள் களம் இறங்க ஆரம்பித்துவிட்டன.
இனிமேல் வரிசையாக கோடை விடுமுறையை குறித்து வைத்து ’ஓ காதல் கண்மனி’, உத்தம வில்லன் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. இந்நிலையில் கடந்த வாரம் கொம்பன், நண்பேண்டா சகாப்தம் ஆகிய படங்கள் ரிலீஸானது. இதில் கொம்பன், நண்பேண்டா படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
கேப்டன் மகன் நடித்த சகாப்தம் படத்திற்கு பெரிதாக ஒன்றும் ஓப்பனிங் இல்லை. தற்போது இப்படங்களின் சென்னை மாநகர வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.
இதில் கொம்பன் ரூ 1.15 கோடியும், நண்பேன்டா ரூ 1.06 கோடியும் வசூல் செய்துள்ளது. கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் படம் வெறும் ரூ 8 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. மேலும் ஜெய் நடிப்பில் வெளியான வலியவன் படம் 2 வாரத்தில் 91.38 லட்சம் குவித்துள்ளது.

No comments:
Post a Comment