Wednesday, 1 April 2015

மீண்டும் ஒருநாள் போட்டிகளில் சங்கக்கார…?


இலங்கை அணியின் குமார் சங்கக்கார இன்னும் 1 வருடம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டிற்காக இம்முடிவை எடுக்கும்படி அவர் கோரியுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அமைச்சர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். இதனையடுத்து சங்கக்கார மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவாரா என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment