இப்போதெல்லாம் ஒரு படம் எடுப்பதை விட அதை ரிலீஸ் செய்வது தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
ரிலீஸ் செய்யும் போது தலைப்பு பிரச்சினை, கதை பிரச்சினை , அதுல நொட்ட, இதுல நெட்டை என ஏகப்பட்ட பஞ்சாயத்தை கூட்டுகிறார்கள் ஒரு சிலர். இதுக்கூட பரவாயில்ல.. ரிலீஸ் செய்த பிறகும் கூட உங்க படத்தால நாங்க நஷ்டம் அடைந்துவிட்டோம் என்று போராட்டத்தை ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதற்கு உதாரணமாக லிங்கா படத்தை கூறலாம். கொம்பன் படத்திற்குக் கூட பிரச்சினை எழுந்தது. அதைத்தொடர்ந்து தற்போது பிரச்சினையில் சிக்கி இருக்கும் படம் மணிரத்னம் இயக்கியுள்ள ’ஓ காதல் கண்மனி’.
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்திருக்கும் இந்தப் படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'கடல்' படத்தை வாங்கி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் 'ஒ காதல் கண்மணி' படத்துக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளனர்.
கடல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை மணிரத்னம் தர வேண்டும் என்று கோரிக்கையை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். தென்னந்திய வர்த்தக கூட்டமைப்பு, விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றில் கடல் பட நஷ்டத்தை மணிரத்னம் கொடுத்துவிட்டுத்தான் 'ஒ காதல் கண்மணி' படத்தை வெளியிட வேண்டும் என்று மன்னன் பிலிம்ஸ் சார்பாக புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனால், திட்டமிட்டப்படி ஏப்ரல் 17ஆம் தேதி 'ஒ காதல் கண்மணி' வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

No comments:
Post a Comment