ஒரு வீடு வாங்குவது என்பது ஒரு நபரின் வாழ்நாளில் மிகப் பெரிய முதலீடு ஆகும். வீட்டுக் கடன் வாங்கும் நபர்கள் தாங்கள் வங்கிக்கு செலுத்தும் வட்டி மற்றும் முதல் தொகையில் ஒரு சிறிய பங்கில் வரிக்கழிப்பு பெறலாம். வீட்டுக் கடனில் ஏற்படும் வரிச் சலுகைகள் இரண்டு பிரிவுகள் அளிக்கப்படுகின்றன.
வீட்டுக் கடன் வாங்கும் போது, கடனை திருப்பிக் கொடுக்க மாதந்தோறும் மாதாந்திர சமத் தவணை (EMI) என்பதை வங்கிக்கு செலுத்த வேண்டும். பிரிவு 80C வீட்டு முதல் தொகை கட்டணத்திற்கு வரிச் சலுகை அளிக்கிறது. பிரிவு 24B கடனின் வட்டி தொகை கட்டணத்திற்கு வரிச் சலுகை அளிக்கிறது.
பிரிவு 80Cஇல் முதல் தொகையின் திரும்பச்செலுத்தலில் கோரும் வரிக்கழிப்பு ரூ 1 இலட்சைத்தை தாண்ட முடியாது. பிரிவு 80C புதிய வீடு வாங்கல் அல்லது கட்டுமானத்திற்கு தான் செல்லும். இருக்கும் வீட்டை மேம்பாடு, விரிவு செய்ய அல்லது மாற்றியமைத்தலுக்கு அல்ல.
பிரிவு 24B இன் அடியில், சொந்த வசிப்பிடமாக அமையும் வீட்டிற்கு, வீட்டுக் கடன் நிதியாண்டின் முடிவிலிருந்து 3 ஆண்டிற்குள் கையக்கப்படுத்தப்பட்டால் அல்லது கட்டப்பட்டால், வீட்டுக் கடன் வட்டி வரிக்கழிப்பு ரூ 1.5 இலட்சம் வரைக்கும் அனுமதிக்கப்படுகிறது. இல்லையென்றால் ரூ 30000 ஆயிரம் வரை தான். வாடகைக்கு விடப்பட்ட அல்லது நோக்கம் கொண்ட வீட்டுக் கடன் வட்டிக்கான வரிக்கழிப்பில் வரம்பு இல்லை.
பிரிவு 80C இல் கோரும் வரிக்கழிப்பிற்கு, உண்மையிலேயே கட்டணம் செய்திருக்க வேண்டும். பிரிவு 24B யில் வரிக்கழிப்புக் கோரல் அட்டுறு அடிப்படையில் (accrual basis) அல்லது உரியது அடிப்படையில் (due basis) கோரலாம். இதை மாற்றி சொன்னால், வட்டி ஏற்கனவே கட்டாமல், வரிக்கழிப்பிற்கு கோரலாம்.
பிரிவு 80Cஇல் வரிச்சலுகை பெற்றால்,வீட்டை ஐந்து ஆண்டிற்கு விற்கக் கூடாது. மீறினால், முந்தைய ஆண்டுகளில் பிரிவு 80Cஇல் கோரப்பட்ட வரிச்சலுகை விற்கும் போது, மூலதன ஆதாயத்துட விற்பாண்டு வருமானமாக கருதப்படும். பிரிவு 24இல் கோரப்பட்ட வரிச்சலுகை இவ்வாறு திருப்பப்படாது.
No comments:
Post a Comment