Wednesday, 1 April 2015

கொம்பனுக்கு கிடைத்த வரவேற்பு.. தயாரிப்பாளரின் கண்ணீர் வீணாகவில்லை..


'குட்டி புலி’ படத்தை இயக்கிய முத்தையா தற்போது கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் ‘கொம்பன்‘ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் கடும் எதிர்ப்பு சமீபத்தில் கிளம்பியது.
இதனால் படம் வெளியாவதில் கடும் சிக்கல்கள் எழுந்தது. இதனால் இந்த பிரச்சினை குறித்துப் பேச நேற்ற செய்தியாளர்களைச் சந்தித்தார் கொம்பன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அப்போது ஒருகட்டத்தில் நல்ல படம் எடுத்திருக்கிறோம். எந்த சாதியையும் குறிப்பிடக் கூட இல்லை. ஆனால் இப்படி சிக்கல் ஏற்படுத்துகிறார்களே என்று சொல்லும்போதே அழுதுவிட்டார்.
பிறகு இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு முற்று புள்ளி வைத்து படத்தை முன்கூட்டிய அதாவது ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸாக இருந்த படத்தை இன்று முன்கூட்டியே வெளியிட்டுள்ளார். படம் பார்த்துக் கொண்டிருக்கும் பலரும் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்று பாராட்டி பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்களில் தகவல்களைப் பதிய ஆரம்பித்துள்ளனர்.
முதல் பாதி பார்த்து முடித்தவர்கள், பார்த்தவரை கொம்பன் படம் சிறப்பாக உள்ளது. அருமை எனத் தகவல் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் ஆரம்பத்திலேயே ராஜ்கிரண் பேசும் வசனத்தைக் குறிப்பிட்டு, இதைவிட எப்படி சாதியை எதிர்க்க முடியும் என்றும் கேட்டுள்ளனர்.
ஊர்க்காரர்கள், அண்ணே நம்ம சாதி சனமெல்லாம் கோயிலுக்கு கெளம்பிட்டாங்க.. நீங்க வரலியா? என்று ராஜ்கிரணிடம் கேட்க அதற்கு ராஜ்கிரண், சனங்க வந்தா பரவால்ல.. நீங்க சாதியையும் சேர்த்து கூட்டிட்டுப் போறீங்களே.. நான் எப்படி வரமுடியும்.. என்று கேட்பார். இதற்கு தியேட்டரில் பலத்த கைத்தட்டல்கள் கிடைக்கிறது.

No comments:

Post a Comment