Wednesday, 1 April 2015

வெங்காயம் உரித்தால் கண்ணீர் வராதா!!?


என்னதான் வெங்காயம் உணவிற்கு சுவையளித்தாலும், அதில் இருக்கும் பிரச்சனை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதனை நறுக்கும் போது, நறுக்குபவரை மட்டுமின்றி சுற்றி இருக்கும் அனைவரையும் கண்ணீர் விட வைக்கும் இந்த வெங்காயங்கள்.
ஆனால், தற்போது நறுக்கும் போது கண்ணீர் வராத வெங்காயத்தை கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானின் வேளாண்மை ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஜப்பானியர்கள், வெங்காயத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட வகை வேதிப்பொருள் தான் கண்ணீர் வருவதற்கு காரணம் என்பதை கண்டறிந்தனர்.
அந்த வேதிக்கலவை நீக்கிய வெங்காய விதையை கண்டுபிடித்தனர். அதனை நட்டு வளர்த்து சாதனை படைத்துள்ளனர்.
தற்போது இதற்கான உரிமையை பெற்றுள்ள ஜப்பானிய நிறுவனம், இந்த வெங்காயத்தை வர்த்தகத்திற்கு கொண்டுவருவது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment