Monday, 6 April 2015

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்கள்…!


ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள், நடிகைகளின் விபரம் வெளியாகியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள், முகவர்கள், தயாரிப்பு நிறுவன அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி டைட்டானிக் திரைப்பட புகழ் நடித்த லியோனார்டோ டிகாப்ரியோ (Leonardo DiCaprio) அதிக சம்பளம் பெறும் நடிகராக விளங்குகிறார். அவர் நடித்து அண்மையில் வெளியான " The Wolf of Wall Street" படத்துக்கு 25 மில்யலின் டாலர் (சுமார் 32 கோடி ரூபா) சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நடிகர் மேட் டாமன் (Matt Damon) 20 மில்லியன் டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். பிராட்லி கூப்பர் (Bradley Cooper) 3 ஆம் இடத்தில் உள்ளார். அவர் 15–20 மில்லியன் டாலர்களை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. ராபர்ட் டவுனி ஜூனியர் (Robert Downey Jr.), ட்வெயின் ஜான்சன் (Dwayne ‘The Rock’ Johnson) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.
நடிகைகளில் சான்ட்ரா புல்லக் (Sandra Bullock) முதலிடத்தில் உள்ளார். அவர் கிராவிட்டி படத்தில் நடிப்பற்கு 20 மில்லியன் டாலர்களை (சுமார் 25 கோடி ரூபா) சம்பளமாக பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தில் ஏஞ்சலினா ஜோலி (15–20 மில்லியன்) உள்ளார். மெலிசா மெக்கார்த்தி (Melissa McCarthy), ஜெனிபர் லாரன்ஸ் (Jennifer Lawrence) (10–15 மில்லியன்) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment