என்ன கொடும சார் இது என்று ஒரே டயலாக்கை வைத்துக் கொண்டு சினிமாவில் காமெடி நடிகராக என்ட்ரி கொடுத்தவர் பிரேம் ஜி. மற்ற இயக்குனர்களின் படங்களில் அந்தளவிற்கு இடம்பெறவில்லை என்றால் கூட, அவரது அண்ணன் இயக்கும் படங்களில் தவராமல் ஆஜர் ஆகிவிடுவார்.
வெங்கட் பிரபுவும், படத்திற்கு கதை எழுதும் போதே, பிரேம் ஜிக்கு ஒரு கதாபாத்திரத்தை ஒதுக்கி விடுவார். அந்த வகையில் சூர்யாவின் மாஸ் படத்திலும் நடித்து வரும் பிரேம் ஜி, மற்றொரு பக்கம் ஹீரோவாக ‘மாங்கா’ படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய பிரேம் ஜி, படத்தினை ’தல’யின் பிறந்தநாளான மே 1-ல் வெளியிட ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

No comments:
Post a Comment