கடந்த மூன்று நாட்களாக கொம்பன் பிரச்சினை கோடம்பாக்கத்தில் தலைவிரித்தாடுகிறது. நேற்றுவரை கொம்பன் படம் ரிலீஸாகுமா..? என்பதே கேள்வி குறிதான்.
கொம்பன் படம் வெளியானால் தென் மாவட்டங்களில் சாதி கலவரம் வெடிக்கும் என்ற அளவுக்கு இந்த படத்தில் சாதி வெறி வழிஞ்சு கிடக்கறதா பேதியை கிளப்பி வந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. வழக்கும் தொடந்தார். ஆனால் அவர் சொன்ன மாறியும் படம் இல்லை.. அவர் கொடுத்த கேஸும் நிலைக்கவில்லை.
இந்த நிலையில் தான் தன்னுடைய தம்பி நடித்திருக்கும் கொம்பன் படத்திற்கு எதிராக எழுத்த பிரச்சனைக்கு ஆதரவு குரல் கொடுத்த திரையுலகத்தை சார்ந்த அனைத்து மக்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரவித்துள்ளார் சூர்யா.
அவர் தனது டுவிட்டரில் இது குறித்து கூறுகையில், கொம்பன் படத்தில் மாமனார், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டம் தான் கதை, எங்கிருந்து இந்த ஜாதி பிரச்சனை எழுந்தது என்று தெரியவில்லை. படம் வெளியாக இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இந்த மாதிரி பிரச்சனை அதிகம் வருகிறது, ஏன் இப்படி செய்கிறார்கள் என்பது மட்டும் புரியவே இல்லை என்று தான் வருத்தத்தை அதில் தெரிவித்துள்ளார் சூர்யா.
No comments:
Post a Comment