பவர் என்றாலே காமெடி பீஸ் என்று முடிவு செய்து விட்டார்கள். அவர் செய்வதும் அப்படி தான் இருக்கும்.
சமீபத்தில் பிரேம் ஜி நடிக்கும் மாங்கா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவர் தனது முதல் பட அனுபவம் குறித்து பேசினார். அப்போது அவர், ‘என் முதல் படத்தில் நடிக்க பலரிடம் பேசினோம், ஆனால் ஒருவரும் நடிக்க முன் வரவில்லை.
சரி என்று நடிகை ரேகாவிடம் கேட்டோம் அவர் நடிக்க ஓகேனு சொல்லிட்டார். அதில் எங்களுக்கு ஒரு டூயட் பாடல் கூட இருந்தது. அதுவும் ’புன்னகை மன்னன்’ படத்தில் இருந்தது போன்றது. அந்தப் பாட்டில் கமலுக்கு ரேகா முத்தம் கொடுப்பார், அதே போல எனக்கும் கொடுப்பார் என்று நினைத்தேன் ஆனால் கடைசி வரை அவர் முத்தம் கொடுக்கவே இல்லை.
அந்த படமும் சில காரணங்களால் ரிலீஸ் ஆக வில்லை.’ என்று கூறினார்.
இத்தனைக்கும் இவர் இது பற்றி கூறும் போது ரேகா இவரது பக்கத்திலேயே நெளிந்து கொண்டிருந்தார். பின்னர் தான் பேசியதும் விழாவில் இருந்து சென்று விட்டார் ரேகா.

No comments:
Post a Comment