Saturday, 28 February 2015

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘காக்கி சட்டை’..?


சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு நடிப்பில் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நேற்று வெளிவந்திருக்கும் படம் ’காக்கி சட்டை’.
உலகமெங்கும் சுமார் 700க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்கள், விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? இல்லையா..? என்ற கேள்விதான் தற்போது கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டிருக்கிறது.
குறுக்கிய காலத்திலேயே முன்னணி இடத்தை நோக்கி வேகமாக வளர்ந்துவரும் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் டான்ஸ், ஆக்‌ஷன், காமெடி என தன்னால் முடிந்தளவுக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறாராம். ஆனால் அவரின் முந்தைய படங்களை போன்று இந்த படம் இல்லை என கருதுகின்றார்களாம் பெரும்பாலான ரசிகர்கள்.
குறிப்பாக, போலீஸ் படத்துக்கே உரிய பரபரப்பும், ஆக்‌ஷன் காட்சிகளும் முழுமையாக இல்லாமல், சிவகார்த்திகேயனுக்கே உரிய முழுமையான காமெடிப் படமாகவும் இல்லாமல் இருப்பதால் ‘காக்கி சட்டை’ முழுத்திருப்தியைத் தரவில்லை என்ற கருத்து தற்போது நிலவுகிறது. ஆனால், ‘பார்க்கலாம்... போரடிக்கவில்லை’ என்ற கருத்தையும் பல ரசிகர்கள் சொல்கின்றனர்.
விமர்சனரீதியாகவும் ‘காக்கி சட்டை’க்கு பெரும்பாலான இணையதளங்கள் ‘ஆவரேஜ்’ எனவும், ஒரு சில இணையதளங்கள் நன்றாக இருப்பதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளன. பாக்ஸ் ஆபிஸைப் பொறுத்தவரை இப்படம் ஏமாற்றம் அளித்திருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுத்தேர்வு நெருங்குவது, உலக கோப்பை கிரிக்கெட் போன்ற காரணங்களால் இப்படத்திற்கு முதல்நாளான நேற்று தியேட்டர்கள் ஃபுல்லாகவில்லை என்ற ரிப்போர்ட்டே கிடைத்துள்ளது.
அதோடு தமிழகமெங்கும் முதல்நாளில் இப்படம் 4 கோடிக்கும் குறைவாக வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் 7 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியா தோல்வியா என்பதை கணிக்க முடியும் என கருதப்படுகிறது.

அம்மாவான ஸ்ரேயா..!


மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த படம் ’த்ரிஷயம்’. இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகிவருகிறது.
இதில் கமல்ஹாசன், கெளதமி நடித்து வருகின்றனர். தற்போது இப்படம் இந்தியிலும் ரீ-மேக் ஆகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் இந்தியில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். ஆனால் 2 குழுந்தைகளுக்கு அம்மாவாக நடித்த மீனா கேரக்டரில் யார் நடிக்கிறார் தெரியுமா..? நடிகை ஸ்ரேயா தானாம்.
தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், ஜெயம் ரவி முதலானோருடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயாவுக்கு சமீபகாலமாக தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் கன்னடம், தெலுங்கு பக்கம் போன ஸ்ரேயாவுக்கு இப்போது ‘த்ரிஷயம்’ இந்தி ரீ-மேக்கில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
படத்தில் இந்த கேரக்டர் முக்கியமானது என்பதால் தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஸ்ரேயா. ஆனால் இவ்வளவும் சீக்கிரம் ஸ்ரேயா அம்மா கேரக்டருக்கு நடிக்க வருவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லையாம்..

முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த்.. பா.ஜ.க.வுக்கு வலியுறுத்தல்!!?


தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜகவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், கடந்த தேர்தலின் போது கூட்டணியாக இருந்த பாஜக, தேமுதிக, பாமக மற்றும் மதிமுக கட்சிகளில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து தேமுதிக மற்றும் பாமக மட்டுமே இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில், பாமக அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது. இதற்கு தேமுதிக கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு கிள்ம்பியுள்ளது.
மேலும், தேமுதிக இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் டெல்லி சென்று பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசுகையில், பாமக தனிச்சையாக முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்தது கண்டனத்திற்கு உரியது என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தினை தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோவில் கோவிலாக சுற்றும் அருண் விஜய்..!


அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸான படம் என்னை அறிந்தால். ஏ.எம் ரதனம் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித்துக்கு இணையாக நடித்திருந்தார் அருண் விஜய். படத்தில் விக்டராக வரும் அவர் மிரட்டலாக நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறினர்.
தொடர்ந்து 10 வருடங்களாக ஒரு வெற்றி படமாவது கொடுக்க வேண்டும் என்று போராடி வருந்த அருண் விஜய்க்கு இப்படம் நல்ல வெற்றி படமாக அமைந்தது. அதற்கு இடையில் வந்த ’தடையற தாக்க’ படம் ஓரளவுக்கு நல்ல படமாக அமைந்தாலும் இப்படம் தான் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது.
இந்நிலையில் இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த அருண் விஜய் , தற்போது கோவில் கோவிலாக சென்று வழிப்பட்டு வருகிறாராம். நேற்றுக்கூட திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வந்தாராம்.

காப்புரிமை மோசடி!! ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.3,366 கோடி அபராதம்!!?


பிரபல ஆப்பிள் நிறுவனத்திற்கு காப்புரிமை மோசடி செய்ததற்காக அமெரிக்க நீதிமன்றம், ரூ.3,366 கோடி அபராதம் விதித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஸ்மார்ட்பிளேஸ் என்ற நிறுவனம், குறிப்பிட்ட சில தொழில்நுட்பங்கள் எங்களது நிறுவன அதிகரியிடம் இருந்து தெரிந்து கொண்டு ஆப்பிள் முறையான அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளனர் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், ஸ்மார்ட்பிளேஸ் நிறுவனம் ரூ.5,282 கோடி இழப்பீடு கேட்டிருந்தது. ஆனால் வழக்கினை விசாரித்த நீதிபதி ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ. 3,366 கோடிகள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் ஆப்பிள் நிறுவனம், அபராதத் தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி கட்ட மறுத்து விட்டது. மேலும், ‘ஸ்மார்ட்பிளேஸ் நிறுவனம் ஏன் முதலிலேயே வழக்கு தொடரவில்லை’ என்று கேள்வி எழுப்பி மீண்டும் அப்பீல் செய்துள்ளது.

அத்வானிக்கு உருக்கமான கடிதம் எழுதிய சோனியா…!


கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சோனியாவிற்கும் அத்வானிக்கும் இடையே கடித பரிமாற்றம் பற்றி பா.ஜ.,வில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தற்போது அத்வானிக்கு சோனியா எழுதி உள்ள கடிதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானிக்கு கடந்த பிப்ரவரி 25 ம் தேதி 50 வது திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்வானிக்கு சோனியா எழுதியுள்ள கடிதத்தில், 50வது திருமண நாள் காணும் உங்களுக்கும், உங்கள் மனைவி கமலா அத்வானிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கடந்த அரைநூற்றாண்டாக நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில், பல்வேறு ஏற்ற தாழ்வுகளின் போது ஒருவருக்கொருவர் பலமாகவும், ஆதரவாகவும் இருந்துள்ளீர்கள். உண்மையில் உங்களின் ஆசிர்வாதம் தான் எங்களுக்கு தேவை. பிப்ரவரி 25 உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் சிறப்பான நாள். அன்று தான் ராஜீவை நான் திருமணம் செய்து கொண்டேன். இந்த வருடம் எனது 47வது திருமணநாள் என குறிப்பிட்டுள்ளார்.
சோனியா அனுப்பிய கடிதத்தை பார்த்த பிறகு அத்வானி, சோனியாவுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அத்வானியின் 50வது திருமண நாளுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள், அத்வானியின் இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பா.ஜ., அளித்த வெளிநாட்டில் கறுப்பு பணம் பட்டியலில் சோனியாவின் பெயரை தவறுதலாக சேர்த்தற்க்கு சோனியாவுக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை, அத்வானி அனுப்பினார். அத்வானி அனுப்பிய மன்னிப்பு கடிதம் வெகு நாட்களுக்கு பிறகு வெளியானது. இது பா.ஜ.,வில் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எந்திரன்-2வின் லேட்டஸ்ட்.. நடிக்க மறுத்தாராம் அமீர்கான்.. காரணம் என்ன..?


சமீபத்தில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் என்றும், அதில் மீண்டும் ரஜினி- ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர் என்றும் செய்திகள் வெளிவந்தது.
மேலும் ரிலையன்ஸ் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இப்படத்தில் வில்லன் கேரக்டருக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக ரஜினியும், ஷங்கரும், அமீர்கானும் சந்தித்து பேசியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி அமீர்கான் இந்தப் படத்தில் நடிக்கவில்லையாம். அவர் ‘எந்திரன் -2’விலிருந்து விலகிவிட்டார் என்று அமீருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணமாம் ஷங்கர் ‘எந்திரன்’ படத்தை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட மூன்று வருடக்கால அவகாசம் எடுத்துக் கொண்டாராம்.அப்படியிருக்க, பிரம்மாண்டமான முறையில் எடுக்கவிருக்கும் ‘எந்திரன்-2’வை எடுத்து முடிக்க அதே காலயளவு எடுக்கப்படும் என்பதால் அமீர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கு கொடுத்திருக்கும் தேதிகள் பாதிக்கப்படும் என்றும், இது தவிர அமீரின் எதிர்கால புராஜெக்ட்டுகளும் பாதிக்கப்படும் என்பதாலும் தானாம் இந்த முடிவாம்.

படக்கூடத இடத்தில் அடி பட்டால்….??


விபத்துகளின் போதும், நண்பர்களின் விளையாட்டான குறும்புத்தனத்தின் போதும் படக்கூட இடத்தில் அடி பட்டால் என்ன ஆகும்…??
வீடியோவை பாருங்க தெரியும்…!!
வீடியோ கீழே



தனுஷ் படத்தில போய் தெரியாம நடிச்சிட்டோமே.. குமுறும் ஐஸ்வர்யா..!


அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இடம்பொருள் ஏவல், குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
முன்பைவிட இளமையாகவும், அழகாகவும் இருக்கும் இவர் தனுஷ் தயாரித்துள்ள படத்தில் ஏண்டா நடித்தோம் என்று கலங்கி வருகிறாராம். காரணம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பே தனுஷும், வெற்றிமாறனும் இணைந்து தயாரிக்கும் காக்கா முட்டை படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் அவருக்கு 30 வயது மதிக்கத்தக்க சேரி பெண் வேடமாம். அதனால் தனது உடல் எடையை பெருக்க வைத்ததோடு, முக அழகையும் அழுக்குப்படுத்திதான் நடித்தாராம். அந்த சமயத்தில் சரியான படங்கள் கைவசம் இல்லாததால் தேடிவந்த வாய்ப்பை விட வேண்டாம் என்று அந்த படத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா.
ஆனால், தற்போது அவர் கதாநாயகியாக நடித்த படங்கள் வெளிவந்து அவருக்கென ஒரு இமேஜை உருவாக்கி விட்டன. அதனால், தான் 30 வயது பெண்ணாக கேரக்டர் ரோலில் நடித்திருக்கும் காக்கா முட்டை படம் வெளிவந்தால் தனது ஹீரோயின் இமேஜ்க்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று மனதளவில குமுறி வருகிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Friday, 27 February 2015

Whats App கும்பல் கற்பழிப்பு விவகாரம்… வழக்கு நடத்த சிபிஐக்கு உத்தரவு!!


சுப்ரீம் கோர்ட் நேற்று வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோ குறித்து கேள்வி எழுப்பி அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஒரு பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ ஒன்று பரவியது. எனினும் இது குறித்து யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை.
சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு வந்த இந்த வீடியோ வர, இது குறித்து வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யவும், சம்பந்த பட்டவர்களை விரைவில் கைது செய்யவும் உத்தரவிட்டது.
மேலும், இந்த வீடியோவினை, உத்திரப் பிரதேசம், பீகார், ஒடிசா மற்றும் டெல்லி அரசுகளும் அந்த வீடியோவினை பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அவர்கள், தவறு செய்கின்றோம் என்ற நினைப்பு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இன்றி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நிச்சயம் தண்டிக்கப் படவேண்டியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

உ.கோ., 2015: ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிர வைத்த நியூசி-ஆஸி போட்டி!!


உலகக் கோப்பை போட்டியின் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய போட்டி இதுதான் என்று கூறலாம். ஒருவழியாக போராடி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.
2015 உலகக் கோப்பை போட்டியின் 20வது லீக் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.
நியூசியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத ஆஸி அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.இதனால் அந்த அணி 32.2 ஓவர்களில் 151 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹேடின் மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.
152 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி அதிரடியான ஆட்டத்துடன் தொடங்கியது. 3.5 ஓவர்களிலேயே 40 ரன்கள் அடித்தது அந்த அணி. எனினும், 78 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்த நிலையில் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சை சமாளிக்க திணறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தனர்.
கேன் வில்லியம்ஸன் ஒருபுறம் நிலைத்து நின்றாலும் மறுபுறம் மலமலவென விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. கடைசி நேரத்தில் அந்த அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. 146 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றபோது, அந்த அணி அடுத்தடுத்த பந்தில் விக்கெட்டை விட ஆஸி அணி வென்று விடுமோ என்ற எண்ணமே அனைவரிடமும் இருந்தது.
22.5வது ஓவரில் தொடர்ந்து இரண்டு பந்துகளில் தடுத்தாடி அணியின் வெற்றிக்கு ஒரளவு நம்பிக்கை கொடுத்தார், பந்துவீச்சாளரான பவுல்ட். பின்னர் 23 வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார் கேன் வில்லியம்ஸன்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசி வென்று விடும் என்று அனைவரும் நினைத்தாலும். நியூசியின் அடுத்தடுத்த விக்கெட் இழப்பு ஆஸிதான் வெற்றி பெரும் என்ற எண்ணத்தினை உருவாக்கியது. சுமார் நான்கு உலகக் கோப்பை தொடர்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸியின் ஸ்டார்க் அபாரமான பந்துவீச்சால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து அணியின் பவுல்ட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

படப்பிடிப்பில் நடிகைக்கு ’கும்மாங்குத்து’..!


தமிழில் விஷாலுடன் ’தீராத விளையாட்டுப்பிள்ளை’, ஜெயம் ரவியுடன் ’ஆதிபகவன்’, போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ’நீதுசந்திரா’.
இவர் கடைசியாக அமிரின் ஆதி பகவான் படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளான இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஆர்.கேவுக்கு ஜோடியாக ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது நீது சந்திராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நீது சந்திராவுக்கும் நடிகர் பவனுக்கும் இடையே நடக்கும் கைகலப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டபோது, அப்போது பவனின் டைமிங் மிஸ்ஸானதில் நீதுவுக்கு குத்து விழுந்து முகத்தில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. சக நடிகைகள் நீதுவுக்கு உதவினர். ஆனால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் நடிக்க தயாரானார் நீது.

ஆஸ்திரேலிய திரைப்பட விழாக்களில் “கள்ளப்படம்”..!


ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை போட்டிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. சிறந்த அணிகளின் அணி வகுப்பாய் போட்டிகள் நடைபெற்று வரும் அதே வேளையில் தமிழ் சினிமா கொண்டாடக்கூடிய ஒரு நிகழ்வும் நடந்துள்ளது.
இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் வடிவேல் இயக்கியுள்ள ‘கள்ளப்படம்’ ஆஸ்திரேலியாவில் ஜூலை 2 முதல் 12 வரை நடைபெறும் ‘ரேவலஷன் பெர்த் சர்வதேச திரைப்பட விழா” மற்றும் செப்டம்பர் 11 முதல் 20 வரை நடை பெறவுள்ள மெல்போர்ன் அன்டர்கிரவுண்ட் திரைப்பட விழா ஆகிய விழாக்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. “
‘கள்ளப்படம்’ சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஒரு கமர்ஷியல் படம், அதன் கதைக்காக ஒரு திரைப்படவிழாவில் அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையில் அனுப்பினோம். வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளது.
நான்கு இளைஞர்கள் அவர்களது முதல் பட வாய்ப்புக்காக சந்திக்கும் விஷயங்களின் கோர்வையே இப்படம் “ என பெருமிதத்துடன் கூறினார் புதுமுக இயக்குனர் வடிவேல்.

குளியலா?? சான்ஸே இல்ல… உண்மையை ஒப்புக் கொண்ட பெண்கள்..!


லண்டைனைச் சேர்ந்த பெண்கள் தினமும் குளிப்பதில்லை என்பதை தாங்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று சுமார் 2000 பெண்களிடம் நடத்திய ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. பெரும்பாலான பெண்கள் தாங்கள் தினமும் குளிப்பதில்லை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
பெரும்பாலான பெண்கள் வேளை அலுப்பு காரணமாக மாலை வேலையில் மட்டும் குளிப்பது இல்லையாம்.
60 சதவீத பெண்கள் தூங்கச் செல்வதற்கு முன் முகத்தில் இருக்கும் மேக் அப்பினைக் கூட கழுவுவதில்லையாம். இதிலும் 35 சதவீத பெண்கள் முகத்தினை அப்படி கழுவினால் தூக்கத்தினை இழக்க நேர்வதாகக் கூறியுள்ளனர்.
மேலும், இந்த ஆய்வின் மூலம், 30 சதவீத பெண்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கூட குளிக்காமல் இருப்பார்களாம். 5 ஒரு பெண் மட்டுமே தினந்தோறும் குளிக்கின்றார்.
பெரும்பாலான பெண்கள் வேலையினால் ஏற்படும் களைப்பையே காரணமாகக் கூறுகின்றனர் என்று அந்த சர்வே கூறியுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்து.. பொளந்து கட்டிய ரசிகர்கள்..!


தற்போது இருக்கும் இளம் ஹீரோக்களில் தயாரிப்பாளருக்கு பிடித்த ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் தான்.
இந்த குதிரையை நம்பி பணம் போட்டால் அது நிச்சயம் பரிசை தட்டும் என்பதுதான் இதற்கு காரணம். திரையுலகிற்கு வந்து ஐந்தாறு படங்களே நடித்திருந்தாலும் எந்த படமும் வசூலுக்கு மோசம் இல்லாமல் ஓடி இருக்கிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ’காக்கி சட்டை’.துரை. செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். முதன் முறையாக போலீஸ் வேடமேற்றிருக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் நல்ல நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
மேலும் படத்தை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகின்றனர். இதில் ஒரு சில ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சிவகார்த்திகேயனை அடுத்த சூப்பர் ஸ்டார், இளைய தளபதி என்று இணையத்தளங்களில் எழுதி வருகின்றனர். இதை பார்த்த பலரும் அவருக்கே அந்த எண்ணம் இல்லை என்றாலும் நீங்களே ஏத்தி விடுங்கள் என்று அந்த ரசிகர்களை பொளந்து கட்டியுள்ளனர்.

கேரளா நடிகையையும் விடாத நிர்வாணப் போட்டோ..?


கேரளா நடிகையையும் விடாத நிர்வாண போட்டோ..? வாட்ஸ் அப்பையும், இண்டர்நெட்டையும் எவன்டா கண்டுபிடிச்சது என்று தேட ஆரம்பித்திருப்பார்கள் ஒரு சில நடிகைகள். பாவும் அவர்களை அந்த அளவிற்கு படுத்திவிட்டது வாட்ஸ் அப்பும், இண்டர்நெட்டும்.
சமீபகாலமாகவே நடிகைகளின் முகங்களை வைத்து மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள், நடிகைகளின் பெயரில் அவர்களது சாயலில் உள்ள பெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளியிடுவது தான் இதற்கு காரணம்.
சமீபத்தில் ஹன்சிகாவின் குளியல் வீடியோ என சொல்லி ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மலையாள நடிகையான ரச்சனா நாராயணன்குட்டி என்பவரின் ஆபாச புகைப்படம் வெளியாகியுள்ளதாம்.
இதுவரை தமிழ் நடிகைகளை மட்டும் பீதியில் திக்குமுக்காட வைத்தவர்கள் தற்போது கேரளா பக்கம் திரும்பிவிட்டார்கள் போல. ரச்சனாவின் இந்த புகைப்படம் கேரள திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ரச்சனாவிடம் போன்போட்டு பலரும் அதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
அவர் உடனே தனது பேஸ்புக் பக்கத்தில், “இது நான் மட்டுமல்ல, சமூகத்தில் உள்ள என்னைபோன்ற பல பெண்களும் எதிர்கொண்டுள்ள அவலம் தான்.. தங்களது குடும்பத்தை சேர்ந்த பெண்களையே மதிக்காத இதுபோன்ற நபர்கள், எப்படி அடுத்த வீட்டு பெண்களை மதிப்பார்கள்” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை கலங்க விட்ட நியூசி.!! முதல் தோல்வி யாருக்கு!!?


2015 உலகக் கோப்பை போட்டித் தொடர் ஆஸி மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இன்று ஆஸி மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடும் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுமே மிகவும் பலம் வாய்ந்த அணிகள் என்பதும், தொடர் வெற்றியை யார் தக்க வைக்கப் போகிறார்கள் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர வைக்கும் ஒன்றாக இருக்கும். இரு அணிகளுமே இதுவரை விளையாடிய போட்டிகள் எதிலும் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸி அணிக்கு நியூசிலாந்து அணி வீரர்களின் பவுலிங்கை சமாளிப்பது பெரிய சவாலாக இருந்தது. சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி 32.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஹேடின் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். நியூசி அணியில் பவுல்ட் 5 விக்கெட்டுகளையும், சவுத்தி மற்றும் விக்டோரி தலா 2 விக்கெட்டுகளையும், ஆன்டர்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது 152 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
மேலும், இன்று பெர்த்தில் நடைபெறும் 21வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் யுஏஇ அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி 12 மணி அளவில் ஆரம்பிக்கப்படும்.

எப்படி இருந்த விஜய் இப்படி ஆயிட்டாரே.. ஆச்சரியப்படும் படக்குழு..!


பொதுவாக படப்பிடிப்பிலும் சரி, ரியல் லைஃப்லயும் சரி விஜய் அமைதியானவர், யாரிடமும் அதிகம் பேசமாட்டார், ஆனால் ஷாட் ரெடி ஓகே சொன்னதும் ஆளே மாறிவிடுவார் என்றுதான் சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள்.
ஆனால் புலி படப்பிடிப்பில் தன்னை பார்ப்பவர்கள் அட எப்படி இருந்த விஜய் இப்படி ஆயிட்டாரே என்று வியக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறாராம்.
விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கும் புலி படத்தில் நடித்து வருகிறார் என்பதை அனைவரும் அறிந்ததுதான். சரித்திர கால திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் நடிக்கின்றனர். மேலும் ஸ்ரீதேவி, சுதீப் என பல நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இருக்கின்றனர்.
தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளையுடன் முடிவடைவதாகவும், அதன் பின்னர் படக்குழுவினர் கேரளா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் வழக்கமாக படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் விஜய் புலி படப்பிடிப்பு தளத்தில் மட்டும் அனைவரிடமும் ஜாலியாக சிரித்துப் பேசுகிறாராம். இதை பார்க்கும் படக்குழுவினர் இது விஜய் தானா..? எப்படி இருந்த விஜய் இப்படி மாறிவிட்டாரே என்று கூறிவருகிறார்களாம்.
அதுவும் படப்பிடிப்பில் தன்னுடைய காட்சிகளை படமாக்கி முடித்து பிறகும் கூட விஜய் அங்கேயே இருந்து அரட்டை அடிக்கிறாராம். விஜய்யின் இந்த மாற்றத்திற்கு காரணம் புலி படத்தின் கதை தானாம். இந்தப் படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அந்த மகிழ்ச்சியில் தான் விஜய் கலகலப்பாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

தின பலன் 28-02-2015


தெரிந்து கொள்வோம்!! நங்கநல்லூர் ஆஞ்சநேயர்!!!
சென்னை மடிப்பாக்கம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில் சென்னையில் உள்ள மிகவும் சிறப்பான கோவில்களில்களில் ஒன்றாகும். இங்குள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சுமார் 32 அடி உயரம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஆறாயிரம் வடைகள் கொண்டு மாலை செய்யப்பட்டு ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - லாபம்
ரிஷபம் - உறுதி
மிதுனம் - உயர்வு
கடகம் - கவனம்
சிம்மம் - நட்பு
கன்னி - புகழ்
துலாம் - ஆதரவு
விருச்சிகம் - செலவு
தனுசு - பரிவு
மகரம் - கோபம்
கும்பம் - வரவு
மீனம் - சுகம்

காக்கி சட்டை - விமர்சனம்….!


தன்னுடைய ஏழாவது படத்தில் ஒரு முழுமையான கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நட்சத்திர நடிகர்களுக்கேயுரிய, காலணியிலிருந்து தொடங்கி படிப்படியாக உயர்ந்து முகத்தைக் காட்டி அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.
நடிப்பு மற்றும் உடல்மொழிகளில் பன்மடங்கு முன்னேற்றம் தெரிகிறது. காவல்துறையின் குற்றப்பிரிவில் வேலை செய்யும் காவலர் வேடம் அவருக்கு. காக்கிச்சட்டைக்குப் பொருத்தமாக இருக்கிறார். தொடக்கக்காட்சிகளில் அவருக்கே உரித்தான நகைச்சுவைக்காட்சிகள் நிறைய இருக்கின்றன. படிப்படியாக உயர்ந்து இறுதிக்காட்சிகளில் பெரிய உயரத்தைத் தொட்டிருக்கிறார்.
சண்டைக்காட்சிகளைத் தேவைக்கதிமாக வைக்காமல் இருக்கிற சண்டைகளையும் மிகப்பொருத்தமான இடங்களில் வைத்திருக்கிறார்கள். அவற்றில் சிறப்பாக நடித்து நற்பெயர் பெற்றிருக்கிறார். வடமாநிலங்களிலிருந்து பிழைப்புக்காகத் தமிழகம் வருகிறவர்களைப் பரிவோடு பாதுக்காக்கவேண்டும் அதுதான் தமிழர்களின் பண்பாடு என்று வசனத்தில் தமிழினித்தைப் பெருமைப்படுத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன், முதல்பாதியில் அவருக்கு ஈடுகொடுக்கிற வகையில் இமான்அண்ணாச்சியும் இரண்டாம்பாதியில் மனோபாலாவும் வந்து நம் வயிற்றைப் பதம்பார்க்கிறார்கள். மயில்சாமி வருகிற காட்சிகள் எல்லாமே ரசிக்கும்படி இருக்கின்றன.
உதவி ஆய்வாளராக நடித்திருப்பவர் கண்கலங்கவைத்துவிடுகிறார். சிலகாட்சிகளில் வருகிற நாகிநீடு வில்லன் என்று எல்லோரையும் நினைக்கவைத்துவிட்டு நல்லவராகவே செத்துப்போகிறார். நாயகி ஸ்ரீதிவ்யா படத்துக்குப் பெரும்பலமாக இருக்கிறார். அவருடைய காதல் கலந்த குறும்புப்பார்வை படத்தில் சிவகார்திகேயனையும் உண்மையில் பார்வையாளர்களையும் கிறக்கமடைய வைக்கிறது. இவர் இரண்டாம்பாதியில் ஒரு பாடலுக்கு செமஆட்டம் போட்டிருக்கிறார். நெருக்கமாக முகத்தைக் காட்டும்போது ஒப்பனை அதிகமாக இருப்பது தெரிகிறது. அதைக்கொஞ்சம் குறைத்திருக்கிலாம்.
நட்புக்காக நடித்திருக்கும் பிரபு தன்னுடைய வேடத்தை நன்றாகச் செய்திருக்கிறார். திருடர்களிடமிருந்து கைப்பற்றிய நகைகளில் நூறுபவுனை ஒதுக்கிக்கொண்டார் என்று அவர் மீது குற்றம் சொல்லப்படுவதும் அதற்கு சிறிதுநேரத்தில் அவர் கொடுக்கும் விளக்கமும் காவல்துறையில் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களின் உண்மைநிலையை விளக்குவதாக இருக்கிறது.
உடல்உறுப்பு மாற்றும் அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவராக நடித்திருக்கும் யோக்ஜேபியின் பாத்திரப்படைப்பும் நடிப்பும் நன்றாக இருக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் இந்திநடிகர் விஜய்ராஸ் மிரட்டியிருக்கிறார். அலட்டிக்கொள்ளாத அவருடைய இயல்பான நடிப்பில் எந்தநேரத்தில் என்ன செய்வாரோ என்று பதறவைக்கிறார். அவர் அவ்வளவு பலமானவராக இருக்கும்போது சாதாரணகாவலர் அவரை எதிர்த்து வெல்லமுடியுமா? அப்படியே வென்றாலும் எதார்த்தமாக இருக்கும்? என்கிற கேள்விகள் வருவது இயல்பு. ஆனால் உண்மைக்கு மிகநெருக்கமான திரைக்கதை எழுதியதோடு அவற்றைச் சரியாகக்காட்சிப்படுத்தி வெற்றியடைந்திருக்கிறார் இயக்குநர் துரைசெந்தில்குமார்.
உலகஅளவில் பெருக்கிக்கொண்டு வருகிற உடல்உறுப்புகள் விற்பனை பற்றியும் அதில் இந்தியாவின் இடம்பற்றியும் சரியாகப்பதிவு செய்து சாதாரணமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தைச் சொல்லியிருக்கும் இயக்குநர் அதை சென்னையிலுள்ள ஒரு காவல்நிலையத்தோடு இணைத்து எல்லோருக்கும் புரிகிறமாதிரி சொல்லியிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்.
படத்தின் இன்னொரு பெரியபலமாக இருப்பது அனிருத்தின் இசை. கதாபாத்திரங்கிளின் மனநிலைகளுக்கேற்ற அவருடைய பின்னணிஇசை நன்று. பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஒளிப்பதிவாளர் சுகுமாரின் உழைப்பு மிகச்சிறப்பு. சண்டைக்காட்சிகள் மற்றும் பல தடைகளைத்தாண்டி சிவகார்த்தியேன் சாலையில் ஓடுகிற காட்சி ஆகியன மிகஇயல்பாக அமைய அவர் மிகவும் கஷ்டப்பட்டிருக்கவேண்டும். பாடல்காட்சிகள் வண்ணமயமாக இருக்கின்றன.
காவல்துறையைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பொருத்தமாகத் திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவல்துறை வந்து யாரை அடித்தாலும் அது சரியானதே என்கிற எண்ணம் வருகிறமாதிரி கடைசிக்காட்சி இருப்பது உறுத்தலாக இருக்கிறது.
இந்தப்படம் இயக்குநர் துரைசெந்தில்குமார் நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி ஸ்ரீதிவ்யா, இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோர் மட்டுமின்றி படத்தில் இடம்பிடித்திருக்கும் எல்லோருமே அடுத்தகட்டத்துக்குப் போகும் வாய்ப்பைக் கொடுக்கும் என்பது நிச்சயம்.

நீங்கள் இலியானாவை இப்படி பார்த்தது உண்டா..? (வீடியோ)


தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை இலியானா. ‘கேடி’, ‘நண்பன்’ ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது தமிழ், தெலுங்கை விட இந்தி சினிமாவிலேயே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் செக்ஸ் ஒன்று மட்டுமே மனிதன் ஆரோக்கியமாக வாழ சிறந்த வழி என்று கூறி பெரும் பரபரப்பை உண்டாக்கினார். மேலும் தனது 16 வயதிலேயே தந்தையிடம் செக்ஸ் பற்றி விவாதித்ததாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து தான் பாய் ப்ரெண்டுடன் டேட்டிங் செல்வதையே அதிகம் விரும்புவதாகவும், டேட்டிங் செல்வது அன்னிய கலாசாரமாக இருந்தாலும், எனக்கு அது மிகவும் பிடிக்கும் என்றும், நான் ஆண் நண்பருடன் டேட்டிங் போவதையே அதிகமாக விரும்புகிறேன் என்றும் பரபரப்பு பேட்டியை எல்லாம் கொடுத்தார்.
தற்போது அவருடைய வீடியோ ஒன்று இணையத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் இலியான டூ பீஸ் உடையில் இருக்கிறார். இது ஏதோ போட்டோ ஷூட்டிற்காக எடுக்கப்பட்டது என்று தெரியவருகிறது.
இதோ அந்த வீடியோ கீழே...


புலி படத்திற்கு முற்றுப்புள்ளி..!


விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கும் புலி படத்தில் நடித்து வருகிறார் என்று நமக்கு தெரியும்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதேவியும் , ‘நான் ஈ’ சுதீப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சரித்திர கால திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை புலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.
புலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.டி ஸ்டுடியோஸ் நிறுவனம் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'புலி படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக வெளிவந்துள்ள தகவல் முற்றிலும் வதந்திதான் என்றும், இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் மட்டுமே நடித்து வருவது தான் உண்மை' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புலி படத்தின் படப்பிடிப்பு நாளையுடன் முடிவடைவதாகவும், அதன் பின்னர் படக்குழுவினர் கேரளா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பெண் தீவிரவாதிகளை நாசம் செய்து கொன்ற இந்திய படையினர்…??


சட்டீஸ்கரில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் சண்டை நடந்தது.
இந்நிலையில், சட்டீஸ்கரின் பொட்டெனர் கிராமத்தில் கடந்த வருடம் நடந்த சண்டையில், காயமடைந்த பெண் போராளிகளை பாலியல் வல்லுறவு செய்து கொன்று, பின் அவர்களை படமெடுத்து பத்திரிக்கைகளுக்கு இந்திய போலிஸ் மற்றும் படையினர், வெளியிட்டுள்ளதாக மாவோயிஸ்டுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாவோயிஸ்டு ஆதரவு தகவல் மையம் ஒன்று இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
துணை இராணுவ மற்றும் சத்தீஸ்கர் போலீஸ் படைகளால், பெண்கள் கெரில்லாக்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிப்போம்! அக்டோபர் 8, மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் சட்டீஸ்கர் காவல் படைகள், மாவட்ட காவல் படைகள் மற்றும் கோயா கமாண்டோக்கள், பிஜப்பூர் மாவட்டத்தில் பொட்டம் (பொட்டெனர்) கிராமத்தில் கொரில்லா குழுவினரை தாக்கினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பெண் தோழர்கள் பூனம் ஜமிலி, மத்கம் ரம்பத்தி மற்றும் மத்கம் லட்சுமி தியாகியாயினர். மத்கம் ரம்பத்தி துப்பாக்கி சூடு நடந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். பூனம் ஜமிலி காயம்பட்டிருந்த வேளையிலே மத்கம் லட்சுமி படுகாயம் அடைந்தார்.
இராணுவத்தினர் காயமடைந்த பெண் கெரில்லாக்களை வன்புணர்ச்சி செய்து கொன்றனர். காவல் துறை பூனம் ஜமிலியின் நிர்வாண உடலை புகைப்படங்களை எடுத்து, பத்திரிகைகளுக்கு விநியோகித்தனர். சத்தீஸ்கரின் இந்தி பத்திரிகை இந்த புகைப்படங்களை பதிப்பித்தது.
பொட்டம் சம்பவம் தற்போது மூன்றாம் கட்டத்திலுள்ள பசுமை வேட்டை நடவடிக்கையின் (OGH) பகுதியாக மத்திய ரிசர்வ் காவல் படைகளும் சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா காவல் படைகளும் நடத்தி வரும் எண்ணிலடங்கா கொலைகள், வன்புணர்ச்சிகள் மற்றும் அழிவு நடவடிக்கைகளில் கூடுதலான ஒரு சம்பவமே.
2012 ஜூனில் சி 60 அதிரடிப்படையினர், கட்சிரோலி மாவட்டத்தின் இடபள்ளி தாலுகாவில் மெட்ரி கிராமத்தின் அருகே பெண்கள் கெரில்லாக்களை தாக்கினர். காயமடைந்த ஆறு பெண்கள் கெரில்லாக்களை பிடித்தனர், அவர்களை வன்புணர்ச்சி செய்து கொடூரமாக கொன்றனர்.
அதன்பின் இறந்த உடல்களுடன் அருவருப்பூட்டும் வகையில் நடந்து கொண்டனர். பொட்டம் சம்பவத்தில், இராணுவத்தினர் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பெண்கள் எல்லா உரிமைகளையும் தங்கள் இரும்பு பூட்சுகளினால் நசுக்கியுள்ளனர் என்பதோடு அரசமைப்பு மற்றும் சட்டங்களுக்கு எதிரான அக்கிரமங்களை புரிந்துள்ளனர்.
அவர்கள் நாகரீக சமூகத்தின் ஒவ்வொரு நாகரீக ஒழுக்கத்தையும் காற்று வெளிகளில் தூக்கியெறிந்ததன் மூலம் தங்களின் வெட்கமின்மையைற்றதனத்தை வெளிக்காட்டியுள்ளனர்.
அவர்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் நாகரீக சமூகத்தின் மதிப்பீடுகளை மீறியுள்ளதோடு காயமடைந்த வீரர்களும் கைதிகளும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் இன்னும் கூடுதலாய் பெண் கிளர்ச்சியாளர்கள் காயப்பட்ட நிலையில் இருக்கும் போது, அவர்கள் மிகவும் கவனமாக நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்துகின்ற யுத்த விதிகளையும் மீறியுள்ளார்.
இது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் படி, மனித உரிமை மீறல் மட்டுமல்ல மேலும் ஒரு போர் குற்றத்தின் நிறைவேற்றமும் கூட. ஜெனிவா மாநாட்டு ஒப்பந்தப்படி இத்தகைய போர் குற்றத்திற்கு உள்ளாகும் நபர்கள் சர்வதேச நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
காயமடைந்த பெண் கெரில்லாக்களை வன்புணர்ச்சி செய்து கொல்வது காவல் படைகளின் கொடூரமான குற்றவியல் பத்திரத்தை மட்டுமல்ல அவர்களின் மற்றும் குற்றவியல் இயல்பையும் சுட்டிக்காட்டுகிறது. ஊடகம் மற்றும் பத்திரிகை துறையும், இத்தகைய அரசாங்க படைகளின் கொடூரமான குற்றவியல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை பற்றி கேள்விகள் எழுப்பினாலும் கூட பெண் கெரில்லாக்களின் நிர்வாண படங்களை வெளியிட்டதன் மூலம் அது தன் சொந்த அற நெறிகளை மீறிவருகிறது.
இது மிகவும் கண்டனத்திற்குரியது. தண்டகாரண்ய இயக்கத்தை ஒடுக்க மத்திய மாநில அரசாங்கங்களால் முன்னெடுத்து செல்லப்பட்ட சல்வா ஜூடுமின் போதும் கடந்த ஐந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் பச்சை வேட்டை நடவடிக்கையின்போதும் எண்ணற்ற அக்கிரமங்களும் படுகொலைகளும் நடத்தப்பட்டன இன்னும் நடத்தப்பட்டுவருகின்றன. காவல்துறை குண்டர்கள் நாகரீக சமூகத்திற்கு சவால் விடும் வகையில் அவர்களின் மனிதத்தன்மையற்ற புகைப்படமெடுத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை வெளிட்டது அனைத்து எல்லைகளையும், மீறியுள்ளது.
வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்ட கொடூரமானது நாங்கள் மக்களிடமும் ஜனநாயகவாதிகளிடமும் குடியுரிமை மற்றும் மனித உரிமை அமைப்புகளிடமும் இத்தகைய அருவருக்கத்தக்க குற்ற இயல்பையும் மனிதத்தன்மையற்றதுமான சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்க கோருகிறோம்.
நாங்கள் போட்டேம் அக்கிரமங்களை புரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை தண்டிக்க கோரும் இயக்கங்களை கட்ட குடியுரிமை மற்றும் மனித உரிமை அமைப்புகளை வேண்டுகிறோம். நாங்கள் இத்தகைய அருவருக்கத்தக்க மனிதத்தன்மையற்ற சட்டவிரோத மனித உரிமை மீறல்களை புறிந்து பின் காவல்துறையால் பிறகு வெளியிடப்பட்ட புகைப்படங்களை பதிப்பித்த சத்தீஸ்கர் இந்தி பத்திரிகையின் செயலை கண்டிக்க அனைத்து இந்திய பத்திரிகையாளர்கள் சங்கங்கள் மற்றும் பதிப்பாசிரியர்களின் கழகங்களை கேட்டுக் கொள்கிறோம்.

கணவனை மீட்டு தாங்க.. தாமரை திடீர் தர்ணா..?


பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை தனது கணவரை சேர்த்து வைக்க கோரி தீடிரென தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியிருப்பவர் தாமரை. இவருக்கும் எழுத்தாளர் தியாகுக்கும் கடந்த 2001 இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் தாமரையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தியாகு பிரிந்து விட்டார். இந்த நிலையில் இன்று காலை கவிஞர் தாமரை தனது மகன் சமரனுடன் சூளைமேடு பெரியார் பாதை முல்லை தெருவில் கணவர் தியாகு வசிக்கும் வீட்டுக்கு வந்தார். அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டு வாசலில் மகனுடன் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
அப்போது தாமரை நிருபர்களிடம் கூறியதாவது:– எனக்கும் தியாகுக்கும் 14 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். தமிழ் உணர்வு போராட்டங்களுக்கு அவருக்கு பக்கபலமாக இருந்தேன். கடந்த வருடம் திடீரென ஒரு திருடன் மாதிரி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அதன்பிறகு வீட்டுக்கு வரவே இல்லை.
என்னை பிரிந்ததற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இப்போது கோர்ட்டு மூலம் விவகாரத்து பெற முயற்சிப்பதாக கேள்விப்பட்டேன். தியாகு மீண்டும் வீட்டுக்கு வந்து என்னோட வாழ வேண்டும். முடிவு தெரியாமல் இங்கு இருந்து கிளம்பமாட்டேன். தமிழ் அமைப்பினர் இந்த பிரச்சனையில் தலையிட்டு எனக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். என்று தாமரை கூறினார்.