Thursday, 30 April 2015

ரிலீஸாகாத உத்தம வில்லன் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!


கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பூ பார்வதி, ஊர்வசி, மறைந்த இயக்குநர் பாலசந்தர் உட்பட பல பிரபலங்கள் நடிப்பில் இன்று ரிலீஸாக இருந்த படம் ’உத்தமவில்லன்’. கமல் நடிப்பில் கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து வெளிவரவிருக்கும் படம் என்பதாலும், மறைந்த இயக்குநர் பாலசந்தர் நடித்துள்ள கடைசி படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே விஸ்ரூபம் எடுத்திருந்தது.
இதனால் முதல் 3 நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் புக் செய்யப்பட்டு விட்டன. தற்போது ரசிகர்கள் பேனர், கட்அவுட், தோரணங்கள் எனதிரையரங்குகளை திருவிழா போல கொண்டாட தொடங்கிவிட்டனர். இதுவரை மகிழ்ச்சியுடன் காணப்பட்ட ரசிகர்கள் தற்போது கொதிப்படைந்துள்ளனர்.
காரணம் இன்று வெளியாக இருந்த உத்தமவில்லன் திரைப்படத்தின் காலை காட்சிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. படத்தயாரிப்பாளருக்கும் பணம் கொடுத்த ஃபைனான்சியருக்கும் ஏற்பட்ட சில பிரச்சினையால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட்டு அடுத்த காட்சிகள் திரையிடப்படுமா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.
கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் காலை கட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இன்னொரு பக்கம் மதியம் காட்சிகள் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. வெளிநாடுகளில் உத்தம வில்லன் பிரம்மாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்!


இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது.
சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கி றது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் ‘சனி பகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்துகும்பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.
இதனை சிலர் தவறான தகவல் என்றும் கூறிவருகின்றனர். ஆனாலும் கூட மேலுமொரு விஷயம் நம் முன்னோர்களை பற்றி வியக்க வைக்கும். நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீச்சுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து வியப்பதுடன், பெருமைப்பட்டு கொள்ளவும் வேண்டும்.

இடிபாடுகளுக்குள் சிக்கி 5 நாள் போராட்டம்: உயிர்பிழைக்க சிறுநீரை அருந்திய அவலம்


நேபாளத்தை தாக்கிய 7.8 ரிக்டர் பூகம்பத்தில் இடிந்து விழுந்த கட்டடமொன்றின் இடிபாடுகளின் கீழிருந்து 82 மணி நேரம் கழித்து இளைஞர் ஒருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ரிஷி கனால் (27 வயது) என்ற மேற்படி இளைஞர் கடந்த சனிக்கிழமை பூகம்பம் தாக்கியபோது விருந்தினர் இல்லமொன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் பூகம்பத்தால் இடிந்து விழுந்த அந்த விருந்தினர் இல்ல இடிபாடுகளின் கீழ் இரு நாட்களாக சிக்கியிருந்த அவரை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.
அந்தக் குழுவினர் ஆரம்ப கட்டமாக அவருக்கு இடிபாடுகளின் வழியாக நீர் மற்றும் ஆக்ஸிஜனை விநியோகித்த பின்னர் 6 மணி நேரம் போராடி இடிபாடுகளை அகற்றி அவரை பாதுகாப்பாக மீட்டனர். அவர் தனது சிறுநீரை அருந்தியே உயிர் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். அவருடன் மேற்படி இடிபாடுகளின் கீழிருந்து மீட்கப்பட்ட மற்றொருவர் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன் இடிபாடுகளின் கீழ் 50 மணி நேரமாக சிக்கியிருந்த நிலையில் பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தப் பெண் இடிந்து விழுந்த இரு மரப்பாளங்களுக்கிடையில் சிக்கியிருந்துள்ளார். அவரை இந்திய தேசிய விபத்து மீட்புப் படையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட போது சுய உணர்வுடன் இருந்த அந்தப் பெண் சிகிச்சைக்காக காத்மண்டு நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். மேற்படி பூகம்பத்தில் சிக்கி பலியானவர்கள் தொகை 5,057 ஆக உயர்ந்துள்ளதுடன் 10,900 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

20 தமிழர்கள் படுகொலை: சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட முடியாது


ஆந்திர போலீஸாரால் 20 தமிழகக் கூலித் தொழிலாளர்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் சி.பி.ஐ., விசாரணை செய்யப்பட மாட்டாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஏப்ரல் 7ம் தேதி, ஆந்திர வனப்பகுதியில், 20 தமிழக கூலித் தொழிலாளர்கள், செம்மரம் கடத்தியதாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து மாறுபட்ட கருத்து வெளியானதை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே வேளை, இது குறித்து ஐதராபாத் ஐகோர்டில் வழக்கு ஒன்றும் நடந்து வருகிறது.
இந்நிலையில், ராஜ்யசபாவில், இவ்விவகாரம் தொடர்பாக, தொடர்பாக, தமிழக எம்.பி.க்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தில் தமிழர்கள் படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த தீர்மாணத்துக்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியவர்களை பிடிக்க சென்ற போலீசாரை நூற்றுக்கணக்கான கடத்தல்காரர்கள் சூழ்ந்து கொண்டு கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கினர். இதையடுத்து தற்காப்புக்காக அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 20 பேர் பலியாகினர். இறந்தவர்களின் உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று சிலரின் உடல்கள் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது நீதிமன்றத்திடம் தான் தெரிவிக்க வேண்டும் என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
இதையடுத்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில்,
ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதால் தமிழகம் வேதனையில் உள்ளது. கடத்தல்காரர்களை பாதுகாக்க கூலி தொழிலாளர்களை கொன்றுள்ளனர். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
கனிமொழிக்கு ஆதரவாக அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறுகையில்,
தமிழர்கள் கொல்லப்பட்டது வருந்தக்கூடிய சம்பவம். என்கவுன்ட்டரை ஏன் நடத்தினோம் என்று போலீசார் தெரிவித்துள்ளது நம்பும் வகையில் இல்லை. இந்த சம்பவம் குறித்து சிபிஐ அல்லது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இவர்களைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில்,
ஆந்திர அரசு தெரிவித்த தகவலை உள்துறை அமைச்சர் நம்மிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி புலனாய்வுத் துறை அளித்த அறிக்கையின் விவரத்தை தெரிவிக்க வேண்டும். கூட்டணி கட்சி அரசு என்ற முறையில் தான் ஆந்திர அரசை மத்திய அரசு பார்க்கிறது. தமிழர்கள் கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இவ்வாதங்களைக் கேட்ட ராஜ்நாத் சிங் இறுதியாக,
20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், நீதி விசாரணை வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். சிபிஐ விசாரணை நடத்த அந்த மாநில அரசு கோரிக்கை விடுக்க வேண்டும். ஆந்திரா அரசு கோரிக்கை விடுக்காததால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. விசாரணை கமிஷன் அமைக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டால் நாங்கள் நிச்சயம் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்று பதிலளித்தார்.

தின பலன் 01-05-2015


தெரிந்து கொள்வோம்: கருவறையில் கற்பூர ஆரத்தி எதற்காக??
பழங்காலத்தில் கடவுள் அமைந்திருக்கும், கருவறை முற்றிலும் இருட்டாக இருக்கும். இன்று இருப்பது போல், மின்விளக்கு வசதிகள் இல்லாததால் கோவில் முழுவது இருட்டாகவே இருந்தது.
இதனால், கருவறையில் இருக்கும் கடவுளை மக்கள் தெளிவாகக் காண முடியாது. எனவே, கடவுளை மக்கள் காண்பதற்காக, கற்பூரம் அல்லது நெய்தீபம் ஏற்றப்பட்டு கடவுளின் முகம், கரங்கள் என உருவம் முழுவதும் ஆரத்தியாகக் காண்பிக்கப்பட்டது.
இதற்கு ஒரு தத்துவ விளக்கமும் உண்டு. மனத்திலுள்ள இருட்டு, அதாவது அஞ்ஞானம், விலக இறை அருள் தேவை. ஆரத்தியில் காட்டும் தீபம் எப்படி கர்ப்பக்கிரக இருளைப் போக்குகிறதோ அதுபோல, நம் அகத்தில் உள்ள இருளும் இறை வழிபாட்டில் மறைந்து விடும்.
கற்பூரத்திற்கு பதில் நெய் தீபம் ஏற்றப்படுவதும் உண்டு. இதில், கற்பூரத்துக்கும் நெய் தீபத்துக்கும் வேறுபாடு உண்டு. கற்பூரம் என்பது ஒரு விநோதமான ஹைட்ரோகார்பன் பொருள். இதை எரிக்கும்போது பதங்கமாதல் (சப்ளிமேஷன் ) என்னும் முறையில் எரிகிறது.
அதாவது அந்தப் பொருளை சூடு படுத்தும்போது திட நிலையில் இருந்து திரவ நிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்குப் போய்விடும். இதே போல கற்பூரம் போல வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதையும் கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்
மேஷம் - யோகம்
ரிஷபம் - பெருமை
மிதுனம் - மேன்மை
கடகம் - சோதனை
சிம்மம் - சிரமம்
கன்னி - நிம்மதி
துலாம் - அமைதி
விருச்சிகம் - கவணம்
தனுசு - பரிவு
மகரம் - பக்தி
கும்பம் - வெற்றி
மீனம் - நன்மை

ஐ.பி.எல் 8: சென்னையை வீழ்த்தி நான்காவது வெற்றியை ருசித்த கொல்கத்தா!!!


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 30வது ஆட்டத்தில் கொல்கத்தா அணி சென்னை அணியை 7 விக்கட்டுக்களால் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியானது நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதின. நேற்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான களமிறங்கிய டுவைன் ஸ்மித்தும் மெக்குல்லமும் ஆடினர். இதில் டுவைன் ஸ்மித் (0) ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரெய்னா (8) ரன்களையும், இன்னும்மொரு ஆரம்பத் ஆட்டக்காரரான மெக்குல்லம் (32) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கமிறங்கிய டுபிளசிஸ் (20) ரன்களையும், அடுத்து களமிறங்கிய டுவைன் பிராவோ (30) ரன்களையும் அடித்து அணியின் ரன்களை உயர்த்தினர். அடுத்ததாக களமிறங்கிய தோனி (1) ரன்களையும், அதன்பின்னர் களமிறங்கிய ஜடேஜா (24) ரன்களையும். அடுத்து களமிறங்கிய பவன் நேகி (27) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆட்டநேர முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஒவர்களில் 9விக்கட்டை இழந்து 165 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சு சார்பில் பிராட் ஹோக் 4விக்கட்டுக்களையும், ஆண்ட்ரு ரசல் 2விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 166 என்ற ரன் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.5 ஒவர்களில் 3விக்கட்டை இழந்து 166 ரன்களை எடுத்து 7விக்கட்டுக்களால் அபார வெற்றியை பெற்றது.
அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான களமிறங்கிய கம்பீரும், உத்தப்பாவும் மிகச் சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தனர் இதில் கம்பீர் (19) ரன்களையும், அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே (3) ரன்களையும் அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (2) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதேவேளை அந்த அணியின் இன்னும்மொரு ஆரம்பத் ஆட்டக்காரரான ராபின் உத்தப்பா அரைச்சதம் தாண்டி ஆட்டமிழக்காமல் (80) ரன்களையும் மற்றுமொரு நடுவரிசை ஆட்டக்காரரான ஆண்ட்ரி ரசல ஆட்டமிழக்காமல் (55) ரன்களை அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக ஆட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசித்த ஆண்ட்ரி ரசல் தேர்வு செய்யப்பட்டார். சென்னை அணியின் பந்துவீச்சில் சார்பில் மொகித் சர்மா, பவன் நேகி, றோனிற் கஜன் மோ ஆகியோர் தலா 1விக்கட்டை கைப்பற்றினர்

தயாராகிறது என்னை அறிந்தால்-2.. அஜித் நடிக்கவில்லையா..?


என்னை அறிந்தால் படம் ரிலீஸாவதற்கு முன்பு இப்படம் வெற்றிபெற்றால் என்னை அறிந்தால் பாகம் 2 எடுக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருந்தார் இயக்குநர் கெளதம் மேனன். அப்போது அவர் சொன்னதை போலவே படமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றது. இதனால் என்னை அறிந்தால் பாகம் 2-வை எடுக்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தப் படத்தை இரண்டு மொழிகளில் அதாவது இந்தி, தமிழில் எடுக்கவுள்ளாராம் கெளதம் மேனன். தமிழில் அஜித்தே நடிக்கிறாராம். இந்தியில் அங்குள்ள பிரபலமான நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து இயக்கும் எண்ணம் இருக்கிறதாம். ஒருவேலை இந்தியில் அஜித் நடிக்க விரும்பினால் தலையை வைத்து இயக்குவேன் என்கிறார் கௌதம்மேனன்.
இந்த பிராஜெக்ட் பெரியது என்பதால் ஆர அமர யோசித்து எடுக்கப்போவதாகவும் அவர் கூறுகிறார். ஆனால் இது குறித்து தல தரப்பு என்ன சொல்கிறது என்று விசாரித்தால், பொதுவாக அஜித் ஒரு படத்தின் தொடர்ச்சியான கதைகளில் நடிப்பதை விரும்புவதில்லை என்றும் ஆனால் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வித்தியாசமாக இருந்தால் யோசிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள். இன்னொரு தரப்பு அஜித் தமிழில் நடித்தாலும் இந்தியில் நடிக்க மாட்டார் என்று அடித்து கூறுகிறது.