RK நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, முதல் நாளில் 5 பேர் வேட்பு மனு செய்துள்ளனர்.
காலியாக உள்ள RK நகர் தொகுதியில் வருகிற 27ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று (ஜூன் 3) வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இது வருகிற 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்: 2வது இடைத் தேர்தல்: ஒண்டிக்கு ஒண்டி மோதும், ஜெ., டிராஃபிக் ராமசாமி??
நேற்று முதல் நாளில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி முதல் ஆளாக வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன், சேலம் பத்மராஜன், அகமது ஷாஜஹான், ரவி, ஆபிரகாம் ராஜ மோகன் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் அனைவருமே சுயேட்சை வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதே தொகுதியில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் நாளை(ஜூன் 5) வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment