Wednesday, 3 June 2015

கூகுளின் டாப் 10 கிரிமினல் பட்டியலில் பிரதமர் மோடி!!?


கூகுள் நிறுவனத்தின் டாப் 10 அதிபயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வருவதை அடுத்து கூகுள் நிறுவனம் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
உலகின் டாப் 10 கிரிமினல்கள் என்று கூகுளில் தேடினால், அதில் பின்லேடன், தாவுத் இப்ராஹிம் ஆகியோரின் புகைப்படங்கள் வருவதுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் வந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


முதல் வரிசையில் 3 இடங்களில் அவரது படம் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், ஹபிஸ் சையது, உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
கூகுளின் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியிருக்கிறது. கூகுள் மன்னிப்பு கோரினாலும் தற்போதும் கிரிமினல்களின் பட்டியலில் அவர் புகைப்படம் நீக்கப்படாமல் அப்படியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment