’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்’. பிரேம் ஆனந்த், முருகன் இயக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ஆஷ்னா ஜாவேரி, அகிலா கிஷோர் நடிக்கின்றனர். ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் வரும் ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்தது குறித்தும், படப்பிடிப்பில் நடந்த சில காமெடி அனுபவங்களை பற்றியும் தற்போது பகிர்ந்துள்ளார் நடிகை ஆஷ்னா ஜாவேரி.
சந்தானத்துடன் நடித்த பாடல் காட்சி ஒன்றில், சந்தானத்தின் தலையில் பீர் பாட்டிலை உடைக்கும் ஒரு காட்சியில் தான் நடித்ததாகவும், இதற்காகவே ஸ்பெஷலாக படக்குழுவினர் தயாரித்த பீர் பாட்டிலை அவர் தலையில் முதலில் உடைத்தபோது அந்த பாட்டில் உடையவில்லை என்று கூறிய ஆஷ்னா, பின்னர் அடுத்த டேக் எடுக்கப்படும்போது சந்தானத்தின் தலையில் மிக வேகமாக பலமுறை அந்த பாட்டிலால் அடித்த பின்னர்தான் உடைந்ததாக கூறினார்.
ஆனால் மறுநாள்தான் பீர் பாட்டிலை வேகமாக அடித்ததால் சந்தானத்திற்கு பயங்கரமான தலைவலி வந்த விஷயம் தனக்கு தெரிய வந்ததாகவும், இதற்காக ஆஷ்னா சந்தானத்திடம் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படப்பிடிப்பின்போது சந்தானம் தனக்கு நிறைய தமிழ் வார்த்தைகளை கற்று கொடுத்ததாகவும், தற்போது தனக்கு பல தமிழ் வார்த்தைகள் தெரியும் என்று கூறிய சந்தானம், இனிமேல் சந்தானத்துடன் அடுத்த படத்தில் நடித்தால், அவர் படப்பிடிப்பின் இடையே கூறும் ஜோக்குகளை தன்னால் ரசிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment