Wednesday, 3 June 2015

Maggi-க்கு தொடரும் பிரச்சனை!! பல மாநிலங்களில் தடை!!?


பிரபல உணவு தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே-ன் தயாரிப்பான Maggi நூடுல்ஸுக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே-ன் Maggi நூடுல்ஸுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்று உள்ளது. ஆனால், இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற அமினோ அமிலம் சேர்க்கப்பட்டிருப்பதாக உத்தரப் பிரதேச மாநில அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
இதன் காரணமாக மேகி நூடுல்சை சாப்பிடுவதால் உடல் நலத்துக்கு கேடு விளையும் என்பதால் உத்தரப் பிரதேச அரசு தடை விதித்ததுடன், நெஸ்லே நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. தொடர்ந்து கேராளா உள்ளிட்ட பல மாநிலங்களில் Maggi நூடுல்ஸுக்கு தடை விதித்துள்ளனர்.


அது மட்டுமின்றி தொடர்ந்து, அரியானாவில் பல்வேறு மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதே போல கர்நாடக மாநில அரசும், மேகி நூடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலை கூட்டத்தில் ஆலோசனை நடத்தி இன்று முடிவு எடுக்கப்படும் என மேற்கு வங்க உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி மாநில அரசும் மேகி நூடுல்சின் தரம் குறித்து அறிய 13 பாக்கெட்டுகளை வைத்து ஆய்வக சோதனை நடத்தியது. இதில், மேகி நூடுல்ஸ் ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், நெஸ்லே நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ‘மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவில் தான் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வில், மேகி நூடுல்ஸ் தரமானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு மேகி நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது’ என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment