சில வருடங்களுக்கு முன்பு சிம்புவும், நயன்தாராவும் காதலித்துக் கொண்டிருந்த போது இணையத்தளங்களில் சிம்புவும், நயன்தாராவும் உதட்டோடு உதடு முத்தம் பதித்துக் கொண்டிருந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
அதேப்போல் கடந்த சில நாட்களாக சிம்புவும், நயன்தாராவும் படுக்கையறையில் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் ஒரு சில இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது நிஜமான புகைப்படமா அல்லது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தெரியாமலே இருந்தது.
அதன் பின் விசாரித்த போது, அந்தப் புகைப்படம் சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியின் புகைப்படம் என்ற தகவல் கிடைத்தது. இருந்தாலும் அப்படிப்பட்ட புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக யாரும் வெளியிட வாய்ப்பேயில்லை.
இருந்தாலும் படத்தை சிம்புவின் குடும்பத்தினர் தயாரிப்பதால், சிம்புவின் அப்பா டி.ஆர் தான் நயன்தாராவின் கவர்ச்சியை வைத்து லாபத்தை அள்ளவேண்டும் என்று படத்திற்காக எடுக்கப்பட்ட படுக்கையறை காட்சிக்களை இணையத்தில் கசிய விட்டு பப்ளிசிட்டி தேடியுள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
காரணம் இது நம்ம ஆளு படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது ரிலீஸாகும், அப்போது ரிலீஸாகும் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் இயக்குநர் பாண்டிராஜ் வேற படத்தை கைவிட்டுவிட்டு வேற படத்தை எடுக்க போய்விட்டதாக சமீபத்தில் புகார் கொடுத்தார் டி.ஆர். தற்போது மீண்டும் படம் தயாராகி ரிலீஸுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த படுக்கையறை காட்சிக்களை டி.ஆர் இணையத்தில் கசிய விட்டதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment