பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பலத்தை எட்டிப் பிடித்து தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் டேவிட் கேமரூன் கன்சர்வேடிவ் கட்சியின் பொருளாதாரத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒற்றுமைக்குப் பாடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி தற்போது பிரித்தானிய பெற்றோர்களுக்கு பயனளிக்கும் வகையில் இலவச திட்டம் ஒன்றை கேமரூன் அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் உள்ள பெற்றோர்களின் 3 மற்றும் 4 வயதான குழந்தைகளை வாரத்தில் 15 மணி நேரங்கள் இலவசமாக பராமரிப்பதற்காக அரசே செலவுகளை ஏற்று வருகிறது. தற்போது பிரித்தானியாவில் உள்ள ‘குழந்தைகள் பராமரிப்பு மையத்தில்’(Childcare) வாரத்திற்கு 15 மணி நேரங்கள் இலவசமாக பராமரிப்பு செய்துவருவதை 30 மணி நேரங்களாக அதிகரிக்க உள்ளதாக பிரதமர் திட்டம் வகுத்துள்ளார்.
அப்படியே இதையும் படிங்க: இளவரசரிடம் திருமணம் கேட்டு முத்தம் வாங்கிய பெண்..!!
இந்த 30 மணி நேரத்திற்கு உண்டான பராமரிப்பு செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும். இதன் மூலம் 3 மற்றும் 4 வயதுடைய குழந்தைகளை அதிக கவனத்துடன், சிறந்த முறையில் பராமரிக்க முடியும். எனினும், பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் குழந்தையின் தாயார்களுக்கு இந்த புதிய திட்டம் பொருந்தாது.
பணிக்கு செல்லும் பெற்றோர்கள், தாய் அல்லது தந்தை மட்டும் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் இந்த புதிய இலவச திட்டம் பொருந்தும். வருடத்திற்கு சுமார் 5 ஆயிரம் பவுண்டுகள் செலவாகும் இந்த புதிய கூடுதல் இலவச திட்டத்தால் 6 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என பிரதமர் கேமரூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனினும், சிலர் இந்த திட்டத்திற்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர். பிரித்தானிய பெற்றோர்களுக்கு பயனளிக்கும் இந்த புதிய கூடுதல் இலவச திட்டங்கள் எதிர்வரும் 2016ம் ஆண்டு தொடக்கம் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அரசு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்படியே இதையும் படிங்க: காலேஜ் கூட முடிக்கல..! 20 வயது பெண் பிரிட்டன் MP..!!

No comments:
Post a Comment