சூர்யா, நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த படம் ’மாசு என்கிற மாசிலாமணி’. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே கலந்த விமர்சனத்தை பெற்று வருவதோடு நல்ல வசூலையும் குவித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் உண்மையிலேயே இப்படத்திற்கு தியேட்டர்களில் பெரிய ஓபனிங் இல்லையாம். வசூலும் மந்தமாகவே இருந்ததாம். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மட்டுமே ஹவுஸ்ஃபுல்லானதாக கூறப்படுகிறது. சூர்யாவின் முந்தைய படமான ‘அஞ்சான்’ படம் முதல் நாள் வசூலாக 11.5 கோடி வசூலித்தது. ஆனால், ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தின் முதல் நாள் வசூல் 6.5 கோடி மட்டுமே.
தற்போது படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்டதால் இதுவரையான படத்தின் வசூல் 17.30 கோடி என தகவல் வெளிவந்துள்ளது. முதல் நாள் மட்டுமே படத்தின் வசூல் மந்தமாக இருந்ததாம். அதற்கு பிறகு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் எதிர்பார்த்ததை விட படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் வசூல் வெங்கட்பிரபுவுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
படம் வெளியான மூன்று நாட்களுக்குள்ளேயே இதுவரை 17.30 கோடி ரூபாயை வசூலித்துள்ளது, அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா நாட்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களை விட மாசு திரைப்படம் வெளியான 3 தினங்களுக்குள்ளேயே அதிகமாக வசூலித்து உள்ளது. பிரபல தமிழ் நடிகர்களின் படங்களை விட சூர்யாவின் மாசு திரைப் படத்திற்கு ஆஸ்திரேலியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment