சரித்திரக் கதைகளைப் பிரமாண்டமாக படமாக்குவதில் வல்லமை மிக்கவர் இயக்குநர் ’ராஜமௌலி’. தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள சரித்திரப் படம் ’பாகுபலி’.
இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ‘பிரபாஸ்’, ’அனுஷ்கா’, ’ராணா’, ’தமன்னா’, ’சுதீப்’, ’சத்யராஜ்’ உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. பாகுபலி தி பிகின்னிங் என்ற முதல் பாகம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றது. வரும் ஜூலை 10ம் தேதி ரிலீஸாகிறது.
இப்படத்தின் ஆடியோ உரிமை ரூ 3 கோடிக்கு விலைப்போகி இந்திய சினிமாவையே வாய் பிளக்க வைத்திருக்கிறது. காரணம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் ஆடியோ உரிமை ரூ 3 கோடிக்கு விலை போவது இதுதான் முதன் முறை.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலரை பார்த்த ரசிகர்களும், திரையுலகினரும் அசந்துவிட்டனர். ஒரு சில ரசிகர்கள் டிரைலரை பார்த்தே ஷங்கரின் ஐ படத்தை விட பல மடங்கு பாகுபலி படம் பிரமாண்டமாக இருக்கும் என்று தெரிவித்து வருகின்றனர்.
பாகுபலி படத்தின் டிரைலர் கீழே...

No comments:
Post a Comment