‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தைத் தொடர்ந்து ஆர்யா, சந்தானாம், இயக்குநர் ராஜேஷ் ஆகிய மூவரும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ (VSOP) படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். 2 பாடல்களுக்கான படப்பிடிப்பு தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் ஏற்கெனவே படமாக்கப்பட்டுவிட்டதாம்.
தற்போது இப்படத்திற்கான டப்பிங் வேலைகள் படு பிஸியாகப் போய்க் கொண்டிருக்கின்றன.டப்பிங்கில் இருக்கும் ஆர்யா இதுகுறித்து விளையாட்டாக டுவீட் ஒன்றைச் செய்துள்ளார்.
‘‘காமெடி கிங் ராஜேஷுடன் VSOP படத்தின் டப்பிங்கில் இருக்கிறேன். மாடுலேஷன், மாடுலேஷன்னு சொல்லியே சாவடிக்கிறான்!’’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment