கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை த்ரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. அதோடு பல இடங்களுக்கு கையுடன் கைகோர்த்து சுற்றி வந்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஏன் இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போகிறார்கள் என்றுக்கூட செய்திகள் வெளியானது.
இந்நிலையில் திடீரென்று த்ரிஷாவுக்கும், படத்தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திடீரென்று அதையும் ரத்து செய்தார் த்ரிஷா. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது.
த்ரிஷாவின் திருமணம் ரத்தானதை கேள்விப்பட்ட மறுநிமிடமே மாஜி காதலன் ராணா மணக்கோலத்தில் அமர்ந்திருப்பதுபோல் இணைய தளத்தில் போட்டோவை வெளியிட்டிருந்தார். அடுத்து த்ரிஷா பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த த்ரிஷா, ‘தேங்க்ஸ் சைக்கோ’ என்று செல்லமாக குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் நடந்த மோகன் பாபு குடும்ப திருமண விழாவில் ராணா, த்ரிஷா தனிமையில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இதையடுத்து இருவருக்கும் மீண்டும் காதல் மலர்வதாக பேச்சு எழுந்துள்ளது.
சமீபத்தில் பாகுபலி படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. அதில் ராணா நடித்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. மாஜி காதலனுக்கு த்ரிஷா வாழ்த்து சொல்வாரா? மாட்டாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப கமென்ட் வெளியிட்டிருக்கிறார் த்ரிஷா.
‘பாகுபலி டீஸர் பெரிதாக கவர்ந்திருக்கிறது. ராக் ஸ்டார் நீங்களும்தான்’ என குறிப்பிட்டிருக்கிறார். ராக் ஸ்டார் என ராணாவைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கிறாராம். அதற்கு பதில் மெசேஜ் அனுப்பிய ராணா ‘தேங்க்யூ பெஸ்டஸ்ட்’ என கூறி உள்ளார். ஹீரோயின்களில் மிகச்சிறந்தவர் த்ரிஷா என்பதை குறிக்கவே பெஸ்டஸ்ட் என்ற வார்த்தையை ராணா பயன்படுத்தி இருக்கிறாராம்.
த்ரிஷா - ராணா இப்படி அன்பு மழை பொழிவதை பார்த்து இருவருக்கும் இடையே மீண்டும் காதல் ஸ்டார்ட் ஆகிவிட்டதாகவே கூறப்படுகிறது. த்ரிஷா நேரத்திற்கு தகுந்தாற்போல் காதலனை மாற்றிக்கொண்டே இருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment