பாலிவுட் சினிமாவில் வசூல் நாயகர்களாக வலம்வருபவர்கள் 'கான்’ நடிகர்கள். கடந்த சில வருடங்களாக இவர்களுக்குள் ஏதோ பிரச்சினை என்று சொல்லி வந்த நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக மேடையில் தோன்றி அசத்தினார்கள்.
ஆமாம் யார் அந்த மூன்று கான்கள் அப்படினு நீங்க கேட்பதற்கு முன்னாடி நாங்களே சொல்லிவிடுகிறோம். ஒரு சிலருக்கு தெரிந்திரிக்கும், இருந்தாலும் சொல்கிறோம்.. அவர்கள் வேற யாரும் இல்லை பாலிவுட்டில் பல சாதனைகளை படைத்த அமிர் கான், ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் தான்.
இவர்களுடைய நட்பு திரையுலகில் மட்டுமல்லாது, சொந்த வாழ்க்கையிலும் நல்லவிதமாகவே நீடிக்கிறது. இவர்கள் மூவரையும் இணைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது பல இயக்குநர்களின் கனவாக இருக்கும். ஆனால் தயாரிப்பாளர்கள் உடன்பட்டு வந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் தற்போது இவர்கள் மூவரையும் தன் படத்தில் ஒன்றாக நடிக்க வைக்க இருப்பதாக, முன்னணி தயாரிப்பாளர் சஜித் நாடியாத்வாலா அறிவித்துள்ளார்.
அந்த படத்தை, சஜித்தே இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கானும், ஷாருக் கானும் இணைந்து மூன்று படங்களில் நடித்துள்ளனர். அமீர் கானுடன் இணைந்து சல்மான், அண்டாஜ் அப்னா அப்னா என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் மூவரும் இணைந்து இதுவரை நடித்ததில்லை.

No comments:
Post a Comment