இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகின்றனர் என்பதை அனைவரும் அறிந்தே. இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சுற்றி வருவதுடன் சில சர்ச்சைகளையும் உண்டாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் கூட இருவரும் விதிமுறைக்கு முரண்பாக நடந்துக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது, தன் காதலியான அனுஷ்கா சர்மா மீது கொலவெறியில் இருக்கிறாராம் விராட் கோலி.
காரணம் ‘தில் தடக்னே டூ படத்தில்’ அனுஷ்கா சர்மா தனது முன்னாள் காதலர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து நீண்ட நேரம் நீடிக்கும் லிப் டூ லிப் முத்தக்காட்சியில் நடித்துள்ளாராம். அதோடு இருவருக்கும் சில நெருக்கமான காட்சிகளும் உள்ளதாம்.
தில் தடக்னே டு படத்தில் குட்டி, குட்டியாக ஆடை அணிந்து போட்டோ எடுத்ததற்கே கோலி அனுஷ்கா மீது கோபம் அடைந்தார். தற்போது ரன்வீர் சிங்கிற்கு அனுஷ்கா லிப் டு லிப் முத்தம் கொடுத்ததால் கோலி மேலும் கோபம் அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து படக்குழுவினர் கூறம்போது ' இந்த முத்தக் காட்சி படத்திற்கு இன்றியமையாத காட்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இப்படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment