பழவகைகளில் எளிதாக கிடைப்பது பப்பாளி இதன் மகத்துவம் அறிந்தவர்கள் இதனை ’தேவதைகள் பழம்’ எனவும் கூறுவர். பழம் மட்டும் இல்லாமல் இதன் விதை, இலை என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றாக பயன்படுகிறது.
பப்பாளி பழத்தில் இரத்த கொழுப்பு அளவை குறைக்கும் என்சைம்கள் நிறைந்துள்ளது. இது பல அழகுச்சாதன பொருட்கள் தயாரிக்க உதவுகிறது. மனித இதய தாக்குதல்களை தடுக்க உதவும் என்சைம்களும் இதில் உள்ளன.
மேலும் இது, உடலில் குடல் புழுக்கள் சிகிச்சைக்கு மிகவும் நல்லது. பப்பாளி பழத்தின் விதை சமையல் பொருளாகவும் பயன்படுகிறது. நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த பழம் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

No comments:
Post a Comment