Tuesday, 2 June 2015

இந்திய பிரதமர் மோடியை பிடித்துக் கொடுத்தால் ரூ.100 கோடி பரிசு!!?

பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி யிலும் ஜமாத் - இ- இஸ்லாமி என்ற கட்சி உள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் 4 எம்.பி.க்களை வைத்துள்ள இந்த கட்சி மதரீதியாகவும், தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் கட்சியாகும்.
இதன்  தலைவர் சிராஜ் - உல்-ஹக் நேற்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ரவல்காட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையது ஜலாகுதீன் போன்ற ஜிகாத் தலைவர்களை கைது செய்ய இந்தியா முயற்சி செய்கிறது. இந்த முயற்சிக்கு ஒரு போதும் வெற்றி கிடைக்காது. ஜலாகுதீனை பிடித்துக் கொடுத்தால் ரூ.50 கோடி கொடுப்பதாக நீங்கள் சொல்லலாம். ஆனால் நான் சொல்கிறேன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை யார் பிடித்து எங்களிடம் கொடுக்கிறார்களோ... அவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு கொடுக்க தயாராக உள்ளோம். மோடியை கைது செய்பவர்களுக்கு உடனே இந்த பரிசு வழங்கப்படும்.

காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி யாகும். இதை மறந்து எந்த பாகிஸ்தான் அரசியல்வாதியாவது இந்தியாவுக்கு ஆதரவாக பேசினால் அவர்கள் பாகிஸ்தானியர்களுக்கும், காஷ்மீர்களுக்கும் துரோகிகளாக கருதப்படுவார்கள். இந்தியாவுடன் யார் நட்புக் கொள்ள விரும்புகிறார்களோ, அவர்கள் டெல்லி, மும்பைக்கு போகட்டும்.
காஷ்மீரிலும், குஜராத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு மோடியே காரணமாகும். பாகிஸ்தான் அரசியல்வாதிகள் இதை கண்டும், காணாதது போல கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.வர்த்தக மேம்பாட்டுக்காக அவர்கள் இந்தியாவை நட்பு நாடு என்று சொல்வது வெட்கக்கேடானது. காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரித்த பிறகே நட்புப் பற்றி பேச வேண்டும்.’ இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment