பல பிரச்சனைகளை சந்தித்து பல தடைகளை தாண்டி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். விஸ்வரூபம் எடுக்கும் போதே அதன் இரண்டாம் பாகத்தையும் கமல் எடுக்க தொடங்கிவிட்டார் என்பதால் முதல் பாகம் வெளிவந்த மூன்று மாத காலத்திற்குள் இரண்டாம் பாகம் வெளிவந்துவிடும் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று இன்னும் முடிவாகாத நிலையில் இருக்கிறது. இந்தப் படம் முடிந்த பிறகு, அடுத்தடுத்து உத்தம வில்லன், பாபநாசம் ஆகிய படங்களில் நடித்துவிட்டார் கமல். தற்போது கூட மேலும் இரு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்திற்கு என்ன தான் பிரச்சினை..? ஏன் ரிலீஸாகவில்லை..? என்று ரசிகர்களிடம் ஒரு கேள்வி இருந்தது. தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.
விஸ்வரூபம் படம் உருவாகும் போதே அதன் இரண்டாம் பாகத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஆனால் இடையில் ‘ஐ’, ‘பூலோகம்’ போன்ற பெரிய படங்களை தயாரித்து கடனில் சிக்கினார். தற்போது ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால் ‘விஸ்வரூபம் 2′ படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இப்பிரச்சினையினால் ஆலோசித்த கமல் வேறு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். இனியும் தாமதிக்காமல் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் இருந்து ‘விஸ்வரூபம் 2′ பட உரிமையை திரும்ப பெறவுள்ளார். இப்படத்தை தனது ராஜ்கமல் நிறுவனம் சார்பாக வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறார்.
கமல், தற்போது ‘தூங்காவனம்’ படத்தில் த்ரிஷாவுடன் நடித்து வருகிறார். ஜூன் இறுதியில் அல்லது ஜூலையில் ‘பாபநாசம்’ படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.

No comments:
Post a Comment