பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதியாக பணி புரிந்தவர் டி குன்கா. இவர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா 10 கோடியும் அபராதம் விதித்தார். மேலும், இவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே எதிர்பார்த்து இருந்ததால், இந்த வழக்கு தீர்ப்பின் மூலம் , இந்தியாவில் உள்ள பெரும்பாலன அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் நீதிபதி குன்காவை பற்றி அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினர்.
தொடர்புடைய செய்திகள்: ஜெயலலிதா குற்றவாளி.....!
இதனால் இவர் தீர்ப்பு வழங்கிய ஒரே நாளில் இந்தியா முழுமைக்கும் மிக பிரபலமானார். சிறப்பு நீதிமன்ற பணிகள் அனைத்து முடிந்து, தீர்ப்பு வழங்கப்பட்டதும், நீதிபதி குன்கா கர்நாடக உயர்நீதிமன்ற ஊழல் தடுப்பு பிரிவு பதிவாளராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த நவம்பர் மாதம் முதல் 7 மாதங்களாக அந்த பதவியில் பணிபுரிந்து வருகின்றார்.
தற்போது, நீதிபதி குன்காவுக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பொது பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment