லிங்கா படத்திற்கு பிறகு சூப்பார் ஸ்டார் ரஜினி காந்த ‘அட்டகத்தி’, ’மெட்ராஸ்’ படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.
இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ஏறக்குறைய 35 வருடங்களாக கலைப்புலி தாணு ரஜினி படத்தை தயாரிக்க வேண்டும் என்று தவம் இருந்தார். அதற்கு இப்போதுதான் பலன் கிடைத்திருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.
இப்படத்திற்கு இதுவரை கதாநாயகி இல்லை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு அட்டக்கத்தி தினேஷும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தேர்வு எல்லாம் முடிந்தவுடன் அதைப் பற்றி முறையாக படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் மலேஷியாவில் தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

No comments:
Post a Comment