Wednesday, 3 June 2015

அது தப்பில்லை: நித்யா மேனன் நச்..!


சித்தார்த் ஜோடியாக ’180’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். அதற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் தமிழில் பெரிய மார்க்கெட் அவருக்கு இல்லை. இதனால் மலையாள கரையோரமும், ஆந்திரா கரையோரமும் ஒதுங்கினார். அங்கு இவருக்கு செம்ம மார்கெட் கிடைத்தது.
இருந்தாலும் தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். அதன் முதல் படியாக தான் சமீபத்தில் வெளிவந்து வெற்றிப்பெற்றது ’ஓ காதல் கண்மனி’. இந்தப் படத்தில் நித்யா மேனனின் நடிப்பும், அழகும் பெரிதும் பேசப்பட்டது.
இப்படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நித்யாமேனன் கூறியதாவது, மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தது பெருமை. முதலில் அவர் என்னிடம் கதையை சொன்னபோது காதல், திருமணம் பற்றி நான் என்ன நினைத்திருந்தேனோ அதையே சொன்னதுபோல் இருந்தது.
திருமணத்துக்கு முன்பு சேர்ந்து வாழ்வது இப்போதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. சமூகத்தின் சூழ்நிலை மாறி இருக்கிறது இதுபோன்ற விஷயங்களில் இளைஞர்கள் ரொம்பவும் சுதந்திரம் எடுத்துக்கொள்கிறார்கள். பெற்றோர்களும் அதற்கு சம்மதிக்கின்றனர். அதில் தவறு இருப்பதாக எனக்கும் தோன்றவில்லை.
திருமணம் செய்துகொள்ளப்போகும் நபரை பற்றிய விவரங்களை முதலிலேயே தெரிந்துகொள்வது நல்லதுதானே. முன்பின் தெரியாத யாரோ ஒருவரை திருமணம் செய்துகொள்வதை என்னால் ஏற்க முடியவில்லை. அட்ஜெஸ்ட் செய்துகொண்டுதான் வாழ்க்கை முழுவதும் வாழ வேண்டும் என்பதைவிட நல்ல தீர்மானத்தை முதலிலேயே எடுத்தால் வாழ்க்கை எளிதாக இருக்கும் என்று கூறினார்.

No comments:

Post a Comment