Wednesday, 3 June 2015

முற்றிலும் பெண்ணாக மாறிய கிம் கர்தாஷியனின் தந்தை!!?


பிரபல டிவி நடிகையான கிம் கர்தாஷியனின் வளர்ப்பு தந்தையும், அமெரிக்காவின் முன்னாள் தடகள வீரருமான, வில்லியம் புரூஸ் ஜென்னர், தன்னை முழுமையாக பெண்ணாக மாற்றிக் கொண்டுள்ளார்.
65 வயதாகும் ஜென்னர் கடந்த 1976-ம் ஆண்டு நடந்த கோடை கால ஒலிம்பிக்கில் டெகாத்லான் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர்.
இவர் தடகள வீரர் மட்டுமல்ல, பேச்சாளர், தொலைக்காட்சி நடிகர், தொழிலதிபர் என்று பன்முகம் கொண்ட கலைஞர். இவர் தற்போது தன்னை முழுமையான பெண்ணாக மாற்றிக் கொண்டுள்ளார்.


இவர், சமீபகாலமாக பெண் போன்று காட்சியளித்தாலும் கூட, ஆண்களுக்கான உடையுடனேயே சுற்றி வந்தார். ஆனால், சமீபத்தில் முதல் முறையாக ஒரு பத்திரிக்கைக்கு பெண்கள் உடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இது குறித்து இவர் கூறுகையில், ‘நான் பெண்ணாக மாறிய பின்பு தான் என்னை சுதந்திரமானவளாக உணர்கிறேன்’ என்று கூறியுள்ளார். இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 6 குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பெயரை காத்லீன் ஜென்னர் என்று மற்றிக் கொண்டுள்ளார். அதோடு அந்த பெயரில் புதிய டுவிட்டர் கணக்கையும் தொடங்கியுள்ளார். அந்த கணக்கினை 4 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் ஃபாலோ செய்துள்ளனர்.
இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் டுவிட்டர் கணக்கினை 5 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் ஃபாலோ செய்தனர். அந்த சாதனையை ஜென்னர் முறியடித்துள்ளார்.



No comments:

Post a Comment