Monday, 1 June 2015

தல படத்துக்கு விஜய் - சூர்யா புரமோஷன்? திரையுலகில் சலசலப்பு..!


பாலிவுட்டில் ஷாருக்கான், அமிர்கான், சல்மான்கான் ஆகிய மூவருக்கும் ஒத்து வராது அப்படி, இப்படி என்று பல தரப்பட்ட செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அதெல்லாம் தொழிலில் மட்டுமே. தனிப்பட்ட முறையில் மூவரும் நட்புடனேயே இருக்கிறார்கள்.
சமீபத்தில் சல்மான் கானுக்கு கோர்ட் சிறை தண்டனை வழங்கியது. அன்றைய தினம் ஷாருக்கான், சல்மான் கான் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார் சல்மான் கான். அப்படத்தில் தனது தோற்றம் எப்படி இருக்கும் என்பதை இணைய தளத்தில் வெளியிட்டார்.
அந்த போஸ்டரை ஷாருக்கானும், அமிர்கானும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் எடுத்து வெளியிட்டு தங்கள் சார்பில் பட புரமோஷனுக்கு உதவி இருக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழ் நடிகர்களிடையே இந்தளவுக்கு தாராள மனப்பான்மை தற்போது உள்ளதா என்று இணைய தளங்களில் இளைஞர்கள் கேள்வி கணைகளை தொடுத்திருக்கின்றனர். அஜித்தை பொறுத்தவரை அவர் தன்னுடைய பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்துவிடுகிறார்.
தவிர டுவிட்டர் போன்ற இணையத்தள தொடர்பும் வைத்திருக்கவில்லை. இதனால் இணையத்தள தொடர்பு வைத்திருக்கும் விஜய், சூர்யா அஜித் நடிக்கும் படத்தின் ஸ்டில்லை தங்களது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டு புரமோஷனுக்கு உதவுவார்களா என்று கோலிவுட்டில் பட்டிமன்றமே நடக்கிறது.

No comments:

Post a Comment