ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபல மாடல் பைக்கான, கிளாசிக் 500 பைக்கின் புதிய மாடலை, அந்நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த புதிய மாடல், Limited edition-னாக 200 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் டெல்லியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் விற்பனை மற்றும் உதிரி பாகங்கள் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் , கிளாசிக் 500 இருசக்கர வாகனத்தின் சிறப்பு பதிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கிளாசிக் 500 Limited Edition வரும் ஜூலை 15-ந் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்: உலகின் மிக அதிக விலையுயர்ந்த கார்கள் இவைதான்!!
கிளாசிக் 500 மாடலில் எவ்வித இயந்திர மாற்றங்களையும் செய்யாமல், புதிதாக இரண்டு நிறங்களில் இந்த Limited Edition வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒன்று விமான படை விமானங்களை போன்று நீல நிறத்திலும், மற்றொன்று பாலைவன புழுதி புயல் நிறத்திலும் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இந்த Limited Edition-ல் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் சேர்த்து மொத்தமாகவே 200 வண்டிகளை மட்டுமே விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment