’காக்கி சட்டை’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரஜினி முருகன்’. பொன்ராம் இயக்கிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, சமுத்திரகனி, ராஜ்கிரண் ஆகியோரும் நடித்துள்ளார்.
லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ படாலின் சிங்கிள் ட்ராக்கை சிங்கப்பூரில் வெளியிட்டனர் படக்குழுவினர். இப்பாடல் வெளியான அன்று டுவிட்டரில் டிரெண்டானது.
இந்நிலையில், ரஜினிமுருகன் படத்திற்கு தயாரிப்பாளரும், தொழிலதிபருமான வருண்மணியனால் சிக்கல் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வருண் மணியன் தனது டுவிட்டர் தளத்தில் … “விஷால் நடித்த மதகஜராஜா (எம்.ஜி.ஆர்) படம் இன்னும் வெளியாகவில்லை. அதே நிலைமை ரஜினிமுருகன் படத்திற்கும் வரும்” என்று மறைமுகமாக டுவிட் செய்திருந்தார்.
இதற்கிடையில் ‘உத்தமவில்லன்’ பட வெளியீட்டின்போது (அதாவது மே 1ஆம் தேதி) கடன் பிரச்சனையில் சிக்கிய லிங்குசாமிக்கு ஞானவேல்ராஜா உதவினார். மேலும் ‘ரஜினிமுருகன்’ படத்திற்காக ஞானவேல்ராஜாவிடம் மூன்று கோடிவரை பணம் பெற்றுள்ளார் லிங்குசாமி. எ
னவே, ரஜினிமுருகனை தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை ஞானவேல்ராஜாவுக்கு வழங்கினார் லிங்குசாமி. இந்நிலையில் இப்படத்திற்காக வருண்மணியனிடம் லிங்குசாமி சாட்டிலைட் உரிமையின் பேரில் வாங்கிய கடனை இதுவரை திருப்பி கொடுக்கவில்லையாம்.
பிரச்சினை இவ்வாறு இழுத்து கொண்டேயிருக்க எதற்கு வம்பு என்று நினைத்த ஞானவேல்ராஜா, ரஜினி முருகன் படத்தின் தமிழக உரிமையை லிங்குசாமியிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். இதனால் ‘ரஜினிமுருகன்’ படம் வெளியாகும் சமயத்தில் வருண்மணியனால் ஏதாவது பிரச்சினை வரக்கூடும் எனத் தெரிகிறது.

No comments:
Post a Comment